சூரிய நமஸ்காரத்தின் போதும் செய்யப்படும் பொதுவாக ஆறு தவறுகள்!!!

17 September 2020, 8:26 pm
Quick Share

சூரிய நமஸ்காரம் எந்த அளவிற்கு நன்மை கொண்டது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இது உடலுக்கு மட்டும் இல்லாமல் மன ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் ஒன்றாக அமைகிறது. பன்னிரண்டு சக்தி வாய்ந்த யோகா ஆசனங்களில் சூரிய நமஸ்காரம் ஒன்று. இதனை செய்த பிறகு உடலுக்கு ஒரு புதிய புத்துணர்ச்சி கிடைக்கும். இதயத்தின் நலனையும் காக்கிறது. உடல் எடையை குறைக்க பலர் இந்த சூரிய நமஸ்காரத்தை செய்து வருகின்றனர். ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இதனை நாம் சரியான வழியில் செய்கிறோமா என்பது தான். எனவே சூரிய நமஸ்காரத்தை சரியான முறையில் எப்படி செய்வது என இந்த பதிவில் பார்ப்போம். 

■சூரிய நமஸ்காரம் செய்யும் போது நமது சுவாசத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் உடல் அசைவுகள் மற்றும் சுவாசம் ஒத்திசையாக இருப்பதை மனதில் வையுங்கள். இதனை படிப்படியாக செய்வதன் மூலம் நல்ல தீர்வினை காணலாம். 

■சூரிய நமஸ்காரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் ஹஸ்தா உத்தனாசனா இரு முறை தோன்றும். இதன் மூலம் முதுகெலும்பானது சூடேறி பலப்படும். மேலும் முதுகெலும்பிற்கு ஒரு முழு நீட்டிப்பை வழங்குகிறது. இது மட்டும் இல்லாமல் நல்ல ஒரு சுவாசத்தை பெற உதவுகிறது. எனவே சூரிய நமஸ்காரத்தின் போது ஹஸ்தா உத்தனாசனாவை தவிர்க்காதீர்கள். 

■நான்கு மூட்டு அமர்வு நிலையின் போது உங்கள் உடல் கைவிரல்கள் அல்லது கால் விரல்களின் உதவியுடன் நேராக இருக்கிறது என்பதை உறுதி செய்யுங்கள். இதனை தவறாக செய்தால் முதுகுவலி ஏற்படும். எனவே இதனை மனதில் வைத்து ஆசனத்தை சரியாக செய்யுங்கள். 

■பலருக்கு மேல்நோக்கி எதிர்கொள்ளும் நாய் போன்ற நிலைக்கும் கோப்ரா நிலைக்கும் இடையில் ஒரு குழப்பம் இருக்கும். இவை இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. எனவே இது இரண்டையும் குழப்பி கொள்ளாதீர்கள். யோகா வல்லுநர்களின் அறிவுரைப்படி சூரிய நமஸ்காரத்தை ஆரம்பிக்கும் முன்பு கோப்ரா நிலையில் இருப்பது நல்லது என கூறுகின்றனர். 

■சூரிய நமஸ்காரத்தை செய்து முடிக்கும் நேரத்தில் கீழ் நோக்கி எழும் நாய் போன்ற நிலையில் இருந்து குதிரை நிலைக்கு மாற வேண்டும். இந்த சமயத்தில் உங்கள் முழங்காலை அதிகமாக நீட்டாதீர்கள். இது உங்களுக்கு முழங்கால் வலியை ஏற்படுத்தும். இவ்வாறு நீங்கள் செய்வது சூரிய நமஸ்காரத்தை தவறான முறையில் செய்வது ஆகும். 

■இறுதியில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது சூரிய நமஸ்காரத்திற்கென்று தனி ஒரு கவனம் செலுத்த வேண்டும் என்பது தான். ஒவ்வொரு சுவாசம் மற்றும் நிலையில் நீங்கள் கவனம் செலுத்தி பயிற்சி செய்யும் போது அதன் முழு பலனை அடைவீர்கள்.