யாரெல்லாம் கருஞ்சீரகத்தை சாப்பிட கூடாது…. அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்???

22 May 2020, 1:59 pm
these people shouldnot take fennel seeds because of these reasons
Quick Share

கருஞ்சீரகத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை என சொல்லாம். பல வகையான புற்றுநோய்க்கு கூட கருஞ்சீரகத்தில் இருந்து தான் மருந்து தயாரிக்கிறார்கள். ஆனால் 97% கருஞ்சீரகத்தால் நன்மை ஏற்பட்டாலும் இதனால் 2 – 3%  தீமையும் இருக்க தான் செய்கிறது. கருஞ்சீரகத்தை அளவிற்கு அதிகமாக எடுத்தாலோ அல்லது தொடர்ந்து பல முறை எடுத்து வந்தாலோ, வியாதிகளோடு இதனை எடுத்து கொண்டாலோ பல பக்க விளைவுகள் இதனால் உண்டாகும்.

வியாதியின் தீவிரத்தை பொருத்து கருஞ்சீரகத்தை ஒரு மண்டலமோ அல்லது இரு மண்டலமோ அல்லது ஒரு சில நாட்களுக்கு மட்டுமே எடுக்க வேண்டும். மாறாக மாதக் கணக்கிலோ, வருடக் கணக்கிலோ அல்லது ஆயுள் முழுவதும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படி மாதக் கணக்கில் கருஞ்சீரகத்தை தொடர்ந்து சாப்பிட்டால் சிறுநீரக பிரச்சனை மற்றும் அழற்சி ஏற்படலாம் என அமெரிக்காவில் உள்ள ஒரு ஆய்வு நிறுவனம் கூறுகிறது. 

கருஞ்சீரகத்தை ஒரு மண்டலம் எடுத்து வந்தாலே உங்களுக்கு பூரண குணம் தெரிய தொடங்கும். அலோபதி மாத்திரைகளை போல ஆயுள் முழுவதும் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. கர்ப்பிணி பெண்கள் எந்த காரணத்தை கொண்டும் கருஞ்சீரகத்தை சாப்பிட கூடாது. கர்ப்பிணி பெண்கள் கருஞ்சீரகத்தை எடுத்து கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவிற்கும், கர்பப்பையிற்கும் பாதிப்பு ஏற்படும்.

மேலும் குழந்தைபேறுக்காக காத்திருப்பவர்கள் கூட கருஞ்சீரகத்தை சாப்பிட வேண்டாம். பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் கருஞ்சீரகத்தை தவிர்க்க வேண்டும். குறைந்த இரத்த அழுத்தம் இருப்பவர்கள் கருஞ்சீரகத்தை எடுக்க கூடாது. ஏனெனில் கருஞ்சீரகத்தின் முக்கியமான பண்பு உயர் இரத்த அழுத்தத்தை வெகுவாக குறைக்க கூடியது. இதனால் குறைந்த இரத்த அழுத்தம் இருப்பவர்கள் கருஞ்சீரகத்தை சாப்பிட்டால் மேலும் இரத்த அழுத்தம் குறைந்து ஆபத்தான சூழ்நிலை உருவாகும்.

இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பவர்களும் கருஞ்சீரகத்தை எடுத்து கொள்ள கூடாது. இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக உள்ளவர்கள் ஒரு மண்டலம் கருஞ்சீரகத்தை சாப்பிட்டாலே சர்க்கரை அளவு சீராகி விடும். எனவே குறைந்த சர்க்கரை அளவு கொண்டவர்கள் கருஞ்சீரகத்தை எடுத்து கொள்ள வேண்டாம். 

மூக்கின் வழியாக ஒரு சிலருக்கு இரத்தம் வடிதல் ஏற்படும். இவர்களும் கருஞ்சீரகத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சைட்டோகிரோம் p450 சப்ஸ்ட்ரேட் அல்லது இதற்கு நிகரான மருந்து சாப்பிடுபவர்கள் எக்காரணம் கொண்டும் கருஞ்சீரகத்தை சாப்பிட கூடாது. கருஞ்சீரகம் பெரும்பாலும் நன்மைகளையே தருகிறது. இருப்பினும் இது போன்ற பிரச்சனைகள் கொண்டவர்கள் மட்டும் கருஞ்சீரகத்தை தவிர்க்க வேண்டும். பிறர் சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி கருஞ்சீரகத்தை சரியான அளவில், சரியான கால அளவில் எடுத்து வர நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

Leave a Reply