உடற்பயிற்சியை முடித்துவிட்டு நீங்கள் சாப்பிட வேண்டிய உணவு இது தான்!!!

19 November 2020, 11:12 am
Work Out - Updatenews360
Quick Share

உடல் ரீதியான செயல்பாடு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு முக்கிய அம்சமாக இருந்தாலும், ஒருவர் நாள் முழுவதும் சாப்பிடுவதைப் பற்றியும், குறிப்பாக ஒரு பயிற்சிக்குப் பிறகு சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் கடுமையான உடற்பயிற்சி அமர்வுக்குப் பிறகு என்ன சாப்பிட வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், ஆரோக்கியமான விருப்பங்களைத் தேடுகிறீர்களானால், இந்த பதிவு உங்களுக்கு தான். நாம் பார்க்க போகும் ரெசிபி 300 கலோரிகளுக்கும் குறைவானது. மேலும் இது சூப்பர் எளிதானது மற்றும் இதனை செய்வதற்கு  ஆடம்பரமான பொருட்கள் எதுவும் தேவையில்லை.   

தேவையான பொருட்கள்:  

60 கிராம்- பாசிப்பருப்பு 

2- பச்சை மிளகாய் 

ஒரு துண்டு- இஞ்சி 

தேவையான அளவு- உப்பு சிறிதளவு கொத்தமல்லி 

செய்முறை:

* முதலில் பாசிப்பருப்பை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பருப்பு ஊறிய பின் அதனை கொரகொரப்பான பேஸ்டாக  அரைக்கவும். 

*நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து அரைத்த பாசிப்பருப்போடு கலக்கவும். 

* தோசை கல்லை அடுப்பில் வைத்து நாம் தயார் செய்து வைத்த மாவை பரப்பி, இருபுறமும் சமைக்கவும். 

* தயிர், மிளகாய் தூள் மற்றும் கருப்பு உப்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட சாஸுடன் இதனை சாப்பிட்டு  மகிழுங்கள்.