தாய்மார்களே….தாய்ப்பால் சுரப்பு இல்லாமல் கவலையாக உள்ளதா??? இதோ அதற்கான தீர்வு!!!

22 May 2020, 1:56 pm
tips for mothers who are breastfeeding
Quick Share

வேப்பம்பூவிற்கு பல நன்மைகள் இருப்பதை நாம் அறிவோம். அதில் முக்கியமான ஒன்று தாய்ப்பால் சுரப்பு. தாய்ப்பால் இல்லாமல் அவதிப்படும் தாய்மார்கள் வேப்பம்பூவை சாப்பிட்டு வரும்போது தாய்ப்பாலானது நன்றாக சுரக்கும். தமிழ்நாட்டில் பெரும்பாலும் அனைவரது வீட்டிலும் வேப்ப மரம் இருக்கும். ஜனவரி மாதத்தில் வேப்பமரம் முழுவதிலும் வேப்பம்பூ பூத்து குலுங்கி இருப்பதை நாம் பார்க்கலாம்.

எனவே ஜனவரி மாதத்தில் அதிக அளவில் வேப்பம்பூவை பறித்து அதனை காய வைத்து சேகரித்து கொள்ளலாம். கர்ப காலத்தில் இருந்தே வேப்பம்பூவை தினமும் உணவில் சேர்த்து வர நல்ல பலன் கிடைக்கும். அதே போல குழந்தைபேறு பெற்ற பிறகும் வேப்பம்பூவை ரசமாகவோ, பொரியலாகவோ சாப்பிட்டு வரலாம்.

tips for mothers who are breastfeeding

வேப்பம்பூவானது தாய்ப்பால் சுரப்பு மட்டும் அல்லாமல் செரிமான கோளாறு, இன்ஃபெக்ஷன் ஆகியவற்றிற்கும் மருந்தாக அமைகிறது. புதிதா குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுவது வழக்கம் தான். மேலும் குழந்தையை பார்த்து கொள்ளும் பொருட்டு தூக்கமின்மை, சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றால் அவதிப்படுவார்கள். இது போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு தருகிறது இந்த வேப்பம்பூ.

குழந்தை பிறந்த தாய்மார்களின் உணவு முறை மிகவும் கவனமாக கொடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாகவே தாய்மார்களுக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த உணவானது குழந்தைபேறு பெற்ற காயத்தையும் ஆற்றும் தன்மை கொண்டதாக இருக்கும். கர்பமாக இருக்கும் போதே உங்களுக்கு தேவையான அனைத்தையும் சேகரித்து வைத்து கொண்டால் குழந்தை பிறந்த பிறகு உங்களுக்கு சுலபமாக இருக்கும்.

இந்த வேப்பம்பூவை வறுத்து சாப்பிடும் போது அதன் கசப்பு தன்மை அதிகமாக இருக்கும். இதனை சரி செய்ய வேப்பம்பூவை நெய் அல்லது வெண்ணெயில் இட்டு வறுத்து சாப்பிடலாம். அல்லது மோரில் சில மணி நேரம் ஊற வைத்து குடித்தாலும் கசப்பு தெரியாது. வேப்பம்பூவை வறுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். வேப்பம்பூ வறுவல் எப்படி செய்வது என பார்க்கலாம்.

tips for mothers who are breastfeeding

◆ஃபிரஷான வேப்பம்பூவை பறித்து அதில் உள்ள பூக்களை மட்டும் தனியாக எடுத்து கொள்ளுங்கள். இதனை மோரில் சில மணி நேரம் மோரில் ஊற வைத்து வெயிலில் காய வைத்து எடுத்து கொள்ளலாம். 

◆அடி கணமான ஒரு வானலை அடுப்பில் வைத்து சூடு செய்து ஒரு தேக்கரண்டி வெண்ணெய் போட்டு உருக்கவும்.

◆இதில் ஒரு சிட்டிகை பெருங்காய தூள் போட்டு, காய வைத்து எடுத்த வேப்பம்பூவை மற்றும் உப்பு  சேர்த்து கிளறவும்.

◆இதனை மதிய உணவோடு சாப்பிட்டு வாருங்கள்.

◆மீதம் இருக்கக் கூடிய பூவை காற்று உட்புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளலாம்.

◆இதனை வாரத்தில் மூன்று முறையாவது சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Leave a Reply