மூன்றே மிளகு கொண்டு உங்கள் தலைவலியை அடித்து விரட்டுங்கள்!!!

22 May 2020, 1:57 pm
tips to cure your headache naturally
Quick Share

தலைவலி பிரச்சனை பலருக்கு ஏற்படுவதுண்டு. தலைவலியானது பல காரணங்களால் உண்டாகும். பெரும்பாலும் தலைவலி சாதாரணமானதாக இருக்கும். ஆனால் அந்த தலைவலி வந்து விட்டால் போதும். நமக்கு கோபம் எங்கு இருந்து வருகிறது என்பதே நமக்கு தெரியாது. அப்படிப்பட்ட தலைவலியை சுலபமாக போக்க ஒரு வீட்டு வைத்தியத்தை தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். 

கருப்பு மிளகு இல்லாமல் நம் வீட்டின் அஞ்சரை பெட்டி இருக்காது. கருப்பு மிளகானது சமையலுக்கு மட்டும் அல்லாமல் பல விதமான வீட்டு வைத்தியங்கள் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கருப்பு மிளகு சரி செய்யும் நோய்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இன்று நாம் பார்க்க இருக்கும் கருப்பு மிளகு இன்ஹலேஷனானது புகைப்பழக்கத்தை விட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு அருமையான மருந்தாக அமையும்.

tips to cure your headache naturally

இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் மிளகு இன்ஹலேஷனை  பயன்படுத்திய 48 தன்னார்வலர்கள் ஒரே நாள் இரவில் தங்களின் புகைப்பழக்கத்தை விட்டு வெளியே வந்து விட்டனர். இவர்களை மூன்று பிரிவுகளாக பிரித்து முதல் குழுவிற்கு மிளகு எண்ணெயை சூடு செய்து அதில் இருந்து வெளிவரும் ஆவியை உள்வாங்கினர். இரண்டாவது குழுவிற்கு புதினா ஆவி கொடுக்கப்பட்டது. மூன்றாவது குழுவிற்கு வெற்று கேட்ரிட்ஜ் தரப்பட்டது.

இதன் முடிவில் மற்ற இரண்டு குழுக்களை விட முதல் குழு புகைப்பழக்கத்தில் இருந்து வெளிவந்தது. இது மட்டும் இல்லாமல் தலைவலி, மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கும் இந்த மிளகு இன்ஹலேஷன் ஒரு அருமருந்தாகிறது. இதனை எப்படி செய்வது என இப்போது பார்க்கலாம்.

★ஒரு பெரிய ஊசி ஒன்றை எடுத்து கொள்ளுங்கள்.

★இந்த ஊசியை ஒரு கல்லை பயன்படுத்தி மிளகினுள் குத்தி கொள்ளவும்.

★இப்போது அடுப்பை பற்ற வைத்து இந்த மிளகை நேரடியாக நெருப்பில் காட்டவும். மிளகு உடனடியாக பற்றிக் கொள்ளும்.

★அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது மிளகில் இருந்து புகை வெளியேறும்.

★இதனை ஒரு இன்ஹேலரை போல பயன்படுத்துங்கள். அதாவது அந்த புகையை உள்வாங்குங்கள்.

★ஊசியை குத்துவதற்கு சிரமமாக இருந்தால் அடுப்பு கரியில் இந்த மிளகை போட்டு அதிலிருந்து கிடைக்கும் புகையை சுவாசியுங்கள்.

★அல்லது ஒரு தேக்கரண்டி மிளகு எடுத்து அதில் சிறிதளவு கொதித்த தண்ணீர் ஊற்றி பேஸ்டாக அரைத்து கொள்ளவும்.

★இதனை உங்கள் நெற்றியில் பற்று போல தடவுங்கள்.

★இதனை கழுவும் போது கவனமாக இருக்க வேண்டும்.

★கழுவுகின்ற நீர் கண்களுக்குள் நுழையாமல் பார்த்து கொள்ளுங்கள்.

குறிப்பு:

*இந்த புகையை மூக்கினை மிக அருகில் வைத்து சுவாசிக்க கூடாது.

*தலைவலி தொடங்கிய உடனே இதனை செய்யுங்கள்.

*இதனை குழந்தைகளுக்கு பயன்படுத்த கூடாது.

*ஒரு மிளகு எரிந்த பிறகு 3 – 4 மிளகை மீண்டும் பயன்படுத்தலாம்.

*புகை உங்களுக்கு அழற்சியை ஏற்படுத்தும் என்றால் நீங்கள் பற்று போட்டு கொள்ளுங்கள்.

Leave a Reply