பாரம்பரிய நெல்: நீரிழிவு நோயை துரத்தி அடிக்கும் காட்டுயானம் அரிசி!!!

30 January 2021, 9:01 pm
Wild Rice - Updatenews360
Quick Share

பாரம்பரிய அரிசி வகைகளில் இன்று நாம் பார்க்க இருப்பது காட்டுயானம் என்னும் அரிசியாகும். இது தற்போது மக்களால் பரவலாக வாங்கி சாப்பிடப்படுகிறது. குறிப்பாக டயாபெட்டிக் நோயாளிகள் இதனை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நெல்லின் கதிர் கிட்டத்தட்ட ஏழு அடி உயரம் வரை வளரக்கூடியது. ஒரு காட்டு யானை வயலுக்குள் நுழைந்து கொண்டால் கூட அதனை கண்டுபிடிக்க முடியாது. ஆதலால் தான் இந்த அரிசிக்கு காட்டுயானம் என்ற பெயர். 

காட்டுயானம் அரிசி இருநூற்று பத்து நாட்களுக்கு விளைவிக்கப்படுகிறது. அதன் பிறகு மூன்று மாதங்களுக்கு இறுப்பு வைக்கப்படுகிறது. பாரம்பரியத்தை மறக்கக்கூடாது என்ற காரணத்தால் இத்தனை கஷ்டப்பட்டு ஒரு விவசாயி இந்த அரிசியை உருவாக்குகிறார். 

இந்த அரிசியை சாப்பிட்டாலே நீரிழிவு நோய் நம்மை நெருங்கவே நெருங்காது. மெதுவாக செரிமானம் ஆகக்கூடிய ஒரு அரிசி இது. மாறாக தற்போது நாம் சாப்பிட்டு கொண்டிருக்கும் வெள்ளை அரிசி நாம் மென்று சாப்பிடாமலே அதி விரைவாக செரிமானம் ஆகி விடுகிறது. இதன் காரணமாக இது நம் உடலின் இரத்தத்தில் ஈசியாக கலந்து நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது. 

நீரிழிவு நோய் வந்துவிட்டாலே அடுத்தடுத்து பல நோய்கள் வந்து விடும். இதனால் தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். இதே தவறை தான் நம் பிள்ளைகளுக்கும் நாம் சொல்லி கொடுக்கிறோம். கைக்குத்தல் அரிசியை சாப்பிடுவதன் நன்மைகளைப் பற்றி இந்த தலைமுறையினருக்கு தெரியாமலே போய்விடும் போல உள்ளது. 

அரிசியை வெறும் சாதமாக தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனை புட்டு, இடியாப்பம், கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தி, பூரி, இட்லி, உப்புமா, தோசை, அடை என பல வகைகளில் அவரவருக்கு பிடித்தமாதிரி செய்து சாப்பிடலாம். இப்போதெல்லாம் நீரிழிவு நோயாளிகள் சப்பாத்தி சாப்பிட்டு வருகிறார்கள். ஆனால் நம் வெப்பநிலைக்கு ஏற்ற உணவு சப்பாத்தி கிடையாது. 

இருநூற்று பத்து நாட்கள் விளைவிக்கப்படும் இந்த அரிசியை பல விவசாயிகள் கஷ்டப்பட்டு அறுவடை செய்து மக்களுக்கு தருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையிலும், நம் உடல் நலத்திற்காகவும் கண்டிப்பாக நாம் வாங்கி சாப்பிட வேண்டும். அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த அரிசி மாமருந்து. 

காட்டுயானம் அரிசியை அடையாக செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இதற்கு இரண்டு கப் காட்டுயானம் அரிசி எடுத்து கொள்ளவும். இதனோடு தோல் உள்ள புரதச்சத்து நிறைந்த  பருப்பு வகைகளை நீங்கள் தேர்வு செய்யலாம். இவ்வாறு குழந்தைகளுக்கு இதில் ஒரு சிறிய அடை போட்டு கொடுத்தாலே அவர்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்து விடும். எனவே பாரம்பரியத்தை மறக்காமல், ஒதுக்காமல் அதனை பின்பற்றி பலனடையுங்கள்.

Views: - 38

0

0