கண்களை அடிக்கடி கசக்கும் பழக்கம் இருக்கவங்க கவனத்திற்கு!!!

Author: Hemalatha Ramkumar
11 December 2024, 11:13 am

உங்களுடைய கண்களை நீங்கள் எவ்வாறு கவனித்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் உங்கள் வாழ்க்கை முழுவதும் நல்ல பார்வை திறனை கொண்டிருக்கலாம். ஆனால் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நம்மில் பலர் நம்முடைய கண்களுக்கு அழுத்தம், வலி மற்றும் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் பல கெட்ட பழக்கங்களை கொண்டுள்ளோம். அதிக நேரம் கேட்ஜெட்டுகளை பயன்படுத்துவது அல்லது மோசமான வெளிச்சம் போன்றவை நம்முடைய கண்களுக்கு மோசமான பழக்கங்களாக அமைகின்றன. உங்களுடைய கண்களை பாதுகாத்து அதில் அழுத்தம் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு நீங்கள் ஒரு சில மாற்றங்களை செய்ய வேண்டும். 

கண்கள் இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான ஒரு பரிசு. எனவே கண்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது நம்முடைய பொறுப்பு. ஆகையால், கண்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதற்கு நாம் கைவிட வேண்டிய ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள் என்ன என்பது சம்பந்தமான குறிப்புகளை இப்பொழுது பார்க்கலாம்.

கண்களை பாதிக்கும் ஆரோக்கியமற்ற பழக்கங்கள் 

UV 400 பாதுகாப்பு கொண்ட சன் கிளாஸ் அணிவது தீங்கு விளைவிக்கும் UV கதிர்களிடமிருந்து நம்முடைய கண்களை பாதுகாத்து கார்னியா, லென்ஸ் மற்றும் ரெட்டினா சேதம் அடையாமல் பாதுகாக்கிறது.

குப்பை உணவுகள், வைட்டமின் மற்றும் மினரல் குறைபாடுள்ள உணவுகள் போன்றவை கண் நரம்புகளை பாதித்து அதனால் பார்வை திறன் இழப்பு கூட ஏற்படலாம். எனவே உங்களுடைய அன்றாட உணவில் வண்ணமயமான பழங்கள் மற்றும் காய்கறிகள் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். வைட்டமின் A, வைட்டமின் C போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடுவது கண்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளும்.

புகை பிடிப்பதால் கேட்டராக்ட், கிளாக்கோமா போன்ற கண் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் கண் நரம்பு சேதம் மற்றும் வைட்டமின் குறைபாடுகள் ஆகியவை அதிக அளவு மது அருந்துவதால் ஏற்படக்கூடிய விளைவுகள்.

டயாபடீஸ், உயர் ரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு போன்றவை வாழ்க்கை முறை நோய்கள் ஆகும். அப்படி இருக்க நம்முடைய வாழ்க்கை முறையில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமாக இதனால் ஏற்படும் சிக்கல்களை நாம் தவிர்க்கலாம். கட்டுப்பாடு இல்லாத நோய்கள் நம்முடைய கண்கள் மற்றும் ரெட்டினாவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி அதனால் குருட்டுத்தன்மை ஏற்படலாம்.

இதையும் படிச்சு பாருங்க: BP இருக்கவங்க இந்த பழத்த தினமும் சாப்பிடுறது அவ்வளோ நல்லதாம்!!!

காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் அதனை சரியாக சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவது, தூங்கும் பொழுது காண்டாக்ட் லென்ஸ் அணிவது, தூசு நிறைந்த கைகளால் கண்களை தொடுவது போன்றவை கண்களில் தொற்றை ஏற்படுத்தி, வலி மிகுந்த குருட்டு தன்மையை ஏற்படுத்தலாம்.

கண்களை அளவுக்கு அதிகமாக கசக்குவதால் அலர்ஜி, கண்களில் வறட்சி மற்றும் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

போதுமான அளவுக்கு தூக்கம் என்பது நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அவசியம் என்பது நமக்கு தெரியும். இதில் கண்களின் ஆரோக்கியமும் அடங்கும். நீங்கள் போதுமான அளவு தூங்கினால் மட்டுமே கண்களுக்கு ஓய்வு கிடைக்கும். இல்லை எனில் வீண் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சோஷியல் மீடியாவில்  பரிந்துரை செய்யப்பட்டுள்ள தீர்வுகளை முயற்சி செய்து பார்ப்பது உங்கள் கண்களின் நிலையை மோசமாகலாம். எனவே இது மாதிரியான வீண் முயற்சிகளை எடுப்பதற்கு பதிலாக கண்ணிபுணரை அணுகுவது அவசியம்.

அளவுக்கு அதிகமாக கேட்ஜெட்டுகளை பயன்படுத்துவது உங்கள் கண்களில் அழுத்தத்தை ஏற்படுத்தி, வறட்சி மற்றும் அலர்ஜியை உண்டாக்கும்.

FDA அங்கீகரிக்கப்படாத கண் சார்ந்த பிராடக்டுகள், ஐ மேக்கப், சீரம்கள் அல்லது கண் மருந்துகளை ஒருபோதும் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் இது கண்களுக்கு மிகவும் தீங்க விளைவிக்கும். அது மட்டுமல்லாமல் இது கண்களுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இது தவிர வருடத்திற்கு ஒருமுறை ஐ செக்கப் செய்து கொள்வது நல்லது. அறிகுறிகள் இல்லாத கண் தொடர்பான நோய்களை கண்டுபிடிப்பதற்கு இந்த ஐ செக்அப் உதவும். இது உங்களுடைய கண்களை ஆரோக்கியமாகவும் நோய் இல்லாமல் வைத்துக் கொள்ளும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Vijay Open Talk About his Wife sangeetha எனக்கு இன்னொருத்தி செட் ஆகவே மாட்டா… விஜய் ஓபன் டாக்!