நம்ம ஊரு தேவதைகளுக்கு ஃபேஸ்கிரீம் எல்லாம் தேவையில்லை! தேங்காய் பாலும், மஞ்சளும் போதும்! எப்படி தெரியுமா?

Author: Dhivagar
1 September 2021, 5:52 pm
use coconut oil and turmeric to get beautiful face
Quick Share

உடல் ஆரோக்கியத்திற்கு எந்த அளவிற்கு ஊட்டச்சத்துக்கள் தேவையோ அதே அளவு ஊட்டச்சத்து சருமத்திற்கும் அவசியம். நம் உடலின் மிகப்பெரிய உறுப்பு சருமம் தான். இது வெளிப்புறம் மற்றும் உள்புற மாற்றத்தின் விளைவாக  பாதிப்படைகிறது. சுற்றுச்சூழல் காரணமாக ஏற்படும் மாற்றங்களை நம்மால் ஓரளவு கட்டுப்படுத்த முடியும். சருமம் அதன் இயற்கை அழகை இழப்பதற்கு காரணம் மாசு, தூசு, அழுக்கு, மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, அழகு சாதன பொருட்களில் உள்ள இரசாயனம் என இன்னும் அடுக்கி கொண்டே போகலாம். 

சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் E, வைட்டமின் C ஆகியவை மிகவும் அவசியம். இதற்கு நீங்கள்  ஆன்டிஆக்ஸிடன்டுகள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை எடுக்க வேண்டும். மேலும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்களும் இதில்  நிறைந்துள்ளது. இன்று நாம் பயன்படுத்த போகும் தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சளின் நன்மைகளை பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். 

தேங்காய் எண்ணெய் நமது சருமத்திற்கு ஒரு நல்ல மாய்ஸரைசராக அமைகிறது. சருமம் வறண்டு போகாமல் அதனை ஈரப்பதத்தோடு வைக்க உதவுகிறது. கொசு மற்றும் பூச்சிகளிடம் இருந்து காத்து கொள்ளவும் தேங்காய் எண்ணெய் உதவும். சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், அரிப்பு, முகப்பரு மற்றும் மேலும் பல தோல் பிரச்சினைகளுக்கு சிறந்த ஒரு தீர்வாக தேங்காய் எண்ணெய் அமைகிறது. 

தினமும் ஒரு துண்டு தேங்காயை வாயில் போட்டு மென்று வந்தால் சருமம் பளபளப்பாக இருக்கும். மேலும் சுருக்கங்கள் மறைந்து இளமையாக இருக்கலாம். இதே போல தேங்காய் பாலும் பல நன்மைகள் கொண்டது.

மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை இருப்பதால் பருக்கள் வராமல் தடுப்பதில் இது சிறந்து விளங்குகிறது. அது மட்டும் இல்லாமல் மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் நிறைந்துள்ளது. சிறந்த கிருமி நாசினியான மஞ்சள் சருமத்தின் பாதுகாப்பை கவனித்து கொள்கிறது. தினமும் மஞ்சளை பயன்படுத்தி வரும்போது முகத்தில் உள்ள ரோமங்கள் உதிர்ந்து சருமம் மென்மையாகும். பாத வெடிப்புகளுக்கும் மஞ்சள் ஒரு நல்ல மருந்து. 

இத்தகைய நன்மைகள் அடங்கிய தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் பால், மஞ்சள் மற்றும் வேறு சில பொருட்களோடு இன்று நாம் ஒரு பானத்தை தயாரிக்க போகிறோம். இதனை எடுத்து கொள்ளும்போது சருமம் ஆரோக்கியமாக இருப்பதோடு அழகாகவும் மாறும். அந்த பானத்தை எவ்வாறு தயாரிப்பது என்பதை இப்போது பார்க்கலாம். 

இந்த பானம் செய்வதற்கு நமக்கு அன்னாசிப்பழம், வாழைப்பழம், ஆளி விதைகள், தேங்காய் பால், தேங்காய் எண்ணெய், இஞ்சி, இலவங்கப்பட்டை தூள், மஞ்சள் தூள் ஆகியவை தேவைப்படும். முதலில் அன்னாசிப்பழம் மற்றும் வாழைப்பழத்தை நறுக்கி ஒரு பாத்திரத்தில் போடவும். இதனோடு ஆளி விதைகள், தேங்காய் பால், தேங்காய் எண்ணெய், இஞ்சி, இலவங்கப்பட்டை தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ளவும். இதனை நீங்கள் அப்படியே குடிக்கலாம் அல்லது இனிப்பு சுவைக்காக சிறிதளவு தேன் சேர்த்தும் பருகலாம். இதனை தொடர்ந்து குடித்து வந்தாலே உங்கள் சருமத்தில் நல்ல ஒரு மாற்றத்தை காண்பீர்கள். 

Views: - 502

0

0