இந்த ஹேக்ஸ் ஃபாலோ பண்ணா வெறும் 5 நிமிடங்களில் வீட்டை சுத்தம் செய்து விடலாம்!!!

Author: Hemalatha Ramkumar
25 November 2024, 7:51 pm

சுத்தம் செய்தல் என்பது நாம் அனைவரும் முன்னுரிமை தரவேண்டிய முக்கியமான ஒரு வேலையாகும். மேலும் அதனை திறம்பட செய்வது மிகவும் அவசியம். எனினும் வேலைக்கு செல்லும் பிசியான பெண்கள் எளிமையான மற்றும் விரைவான சுத்தம் செய்தலுக்கு உதவும் ஹேக்குகளை தெரிந்து வைத்துக் கொள்வது அவர்களுடைய வேலையை பாதியாக குறைக்கும். வெறும் 5 நிமிடங்களில் இடத்தை சுத்தம் செய்து எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் சூழலை அழகாக மாற்றுவதற்கு எளிமையான சில ஹேக்குகள் உள்ளன. வீடு சுத்தமாக இல்லாவிட்டால் அது வரவேற்கத்தக்கதாக இருக்காது. சுத்தமான வீடு நமக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், நமக்கு மனத் தெளிவை அளித்து, நம்முடைய ஒட்டுமொத்த மனநிலையை மேம்படுத்தும். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள ஹேக்குகளை பின்பற்றினால் உங்களுடைய வீடுகளை நீங்கள் சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். வேலை அடுக்கடுக்காக சேகரிக்கப்படுவது தடுக்கப்படும். அவ்வாறான சில ஹேக்குகளை இப்பொழுது பார்க்கலாம். 

நல்ல கேட்ஜெட்டுகளில் முதலீடு செய்யவும் ரோபோடிக் வேக்கம் கிளீனர்கள், எலக்ட்ரிக் மாப்புகள் மற்றும் ஸ்டீம் கிளீனர்கள் போன்ற அதிவிரைவு தொழில்நுட்பம் கொண்ட சுத்தம் செய்யும் ப்ராடக்டுகளை நவீன தொழில்நுட்பம் நமக்கு வழங்குகிறது. இது நம்முடைய வாழ்க்கையை எளிதாக மாற்றுகிறது. இந்த சாதனங்கள் குறைந்தபட்ச முயற்சியுடன், நேரம் மற்றும் ஆற்றலை சேமிப்பது ஆகியவற்றுடன் உங்கள் வீட்டை சுத்தமாக வைப்பதற்கு உதவுகிறது. 

ஒன்றன்பின் ஒன்று விதி எப்பொழுதும் ஒரு வேலையை எடுக்கும்பொழுது அதனை முழுமையாக முடித்த பிறகு நீங்கள் அடுத்த வேலைக்கு செல்ல வேண்டும். மேலும் வேலைகளை ஒரேடியாக சேர்த்து வைப்பதை தவிர்த்து விடுங்கள். உடனுக்குடன் வேலைகளை செய்து முடிப்பது நல்லது. வரிசையாக உங்களுடைய வேலைகளை செய்வது சிறந்த முடிவுகளை தருவதற்கு உதவும்.

இதையும் படிக்கலாமே: கூந்தல் வால் மாதிரி ஒல்லியா மாறிடுச்சா… உங்களுக்கான சிறந்த வீட்டு வைத்தியங்கள்!!!

உங்களுக்கு நீங்களே பரிசளித்துக் கொள்ளுங்கள் 

சுத்தம் செய்யும் செய்வதற்கு நேரத்தை செலவு செய்யும் பொழுது உங்களை நீங்கள் கவனித்துக் கொள்வதும் மிகவும் முக்கியம். எனவே வேலை செய்யும் பொழுது உங்களுக்கு ஒரு கப் டீ, ஒரு சிறிய ட்ரீட், ருசியான ஸ்னாக்ஸ் அல்லது புத்துணர்ச்சி தரும் பானம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு தேவையான ஆற்றலை வழங்கி, பாசிட்டிவான மனநிலையை உருவாக்கும். 

மைக்ரோ ஃபைபர் துணிகளை பயன்படுத்தவும்

மைக்ரோ ஃபைபர்கள் எளிதாக அழுக்கு, தூசு மற்றும் எண்ணெய் பிசுக்கு ஆகியவற்றை உறிஞ்சும் தன்மை கொண்டது. அதே நேரத்தில் இதற்கு நீங்கள் எந்த ஒரு கடுமையான கெமிக்கல்களையும் பயன்படுத்த வேண்டாம். இந்த அதிக உறிஞ்சும் தன்மை கொண்ட மைக்ரோ ஃபைபர் துணிகளை பயன்படுத்தி நீங்கள் விரைவாக சுத்தம் செய்து விடலாம். அதே நேரத்தில் அதன் மூலமாக கிடைக்கும் முடிவுகளும் சிறந்ததாக இருக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Harish Kalyan new Pan India movie ஹரிஷ் கல்யாணுடன் இணையும் பாலிவுட் நடிகர்..ஆஹா மஜா கூட்டணியா இருக்கே ..!
  • Views: - 73

    0

    0

    Leave a Reply