வியப்பூட்டும் தேங்காய் மட்டையின் நன்மைகள்!!!

Author: Hemalatha Ramkumar
3 December 2022, 12:55 pm
Quick Share

பொதுவாக தேங்காயை பயன்படுத்தி விட்டு அதனை சுற்றி உள்ள மட்டையை நாம் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் தேங்காய் மட்டையில் ஏராளமான நன்மைகள் உள்ளது. அது தெரிந்தால் என்று தெரிந்தால் இனியும் தேங்காய் மட்டையை தூக்கி எறிய மாட்டீர்கள்.

காயத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க தேங்காய் மட்டையை பயன்படுத்தலாம். தேங்காய் மட்டையை மஞ்சள் வைத்து அரைத்து காயம் மீது தடவினால் வீக்கம் விரைவில் குறையும். பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறையை தேங்காய் மட்டை கொண்டு நீக்கலாம்.

இதற்கு தேங்காய் மட்டையை நெருப்பில் எரித்து பொடி செய்து கொள்ளுங்கள். இதனுடன் சோடா கலந்து பற்களில் மசாஜ் செய்தால் மஞ்சள் கறை மறைந்துவிடும். சொன்னால் நம்ப மாட்டீர்கள்… தலைமுடியின் நரையை போக்கி அதனை கருமையாக்க தேங்காய் மட்டை பயன்படுகிறது.

நரை முடியை கருமையாக்க முதலில் தேங்காய் மட்டையை ஒரு கடாயில் போட்டு சூடாக்கவும். இதனை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைமுடியில் தடவவும். ஒரு மணி நேரம் ஊற வைத்த பின் தலை குளித்து வந்தால் விரைவில் மாற்றம் தெரியும்.

பைல்ஸ் பிரச்சினை உள்ளவர்கள் தேங்காய் மட்டையை அரைத்து அதனை நீருடன் சேர்த்து சாப்பிட்டு வர விரைவில் நிவாரணம் கிடைக்கும். தேங்காய் மட்டை நார்ச்சத்து நிறைந்தது. ஆகையால் இது பல விதமான பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது.

Views: - 177

0

0