பாரம்பரிய நெல்: வாயுத்தொல்லையை முற்றிலுமாக நீங்க வாலன் அரிசி!!!

1 March 2021, 10:40 pm
Quick Share

இன்று நாம் பார்க்க இருக்கும் நெல் இரகம் வாலன் அரிசி ஆகும். இந்த நெல்லின் நுனி பகுதி வால்முனையைப் போல இருப்பதால் இதற்கு வாலன் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இது நூற்றி அறுபது நாட்கள் வயதுடைய நெல் வகையாகும். இயற்கை சீற்றங்களான வெள்ளம் மற்றும் வறட்சியை தாங்கி வளரக்கூடிய தன்மை கொண்டது.

வாலன் அரிசி எல்லா மண் வகையிலும் நன்றாக செழித்து வளரும். இந்த அரிசி நல்ல வெண்மையாக இருக்கும். வாலன் அரிசிக்கு இயற்கையாகவே ஒரு இனிப்பு சுவை கொண்டது. இதற்கு எவ்வித உரமும் பயன்படுத்த தேவையில்லை. ஒரு சால் உழவில் விதைப்புக்கு ஏற்ற வகை நெல் இது. 

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஒரு ஏக்கரில் முப்பது மூட்டை வரை மகசூல் கிடைக்கும். இதனை விளைவிக்க அதிக செலவு எதுவும் தேவையில்லை. குறைந்த  செலவில் அதிக லாபம் ஈட்டலாம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் காவிரி ஆற்றின் கரை ஓரங்களில் வாலன் அரிசி வளர்க்கப்பட்டு வந்ததாக வரலாறு கூறுகிறது.

வாலன் அரிசி மருத்துவ பயன்கள்:

*வாலன் அரிசியை தொடர்ந்து சாப்பிட்டால் குடல் சுத்தமாகும். இதனால் சருமம் அழகாகும்.

*பித்தம், வயிறு சம்பந்தமான நோய்களை  குணமாக்கும் தன்மை வாலன் அரிசிக்கு இருக்கிறது.

*மேலும் கரப்பான், மந்த வாயு சம்மந்தப்பட்ட கோளாறுகளும் குணமாகும்.

*வாலன் அரிசியை வேக வைத்து அதனோடு சிறிதளவு கறிவேப்பிலை போட்டு ஊற வைத்து விடுங்கள். இந்த நீராகாரத்தை பருகி பாருங்கள். அப்படியே நெய் போல மணம் கமழும்.

*இந்த அரிசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் உள்ளது. எனவே நம்மை நோய் தொற்று நெருங்காமல் இருக்க இந்த அரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள்.

*இந்த அரிசிக்கு இயல்பாகவே இனிப்பு சுவை இருப்பதால் இதனை வைத்து பல வகையான பண்டங்களை செய்து சாப்பிடலாம்.

*புதிதாக வயதுக்கு வந்த பெண்களுக்கு இந்த அரிசியை வைத்து புட்டு செய்து கொடுத்தால் அதக பலம் தருவதாக கூறப்படுகிறது.

*அது மட்டும் இல்லாமல் ஆடிப்பெருக்கு, சுமங்கலி பூஜை போன்ற விசேஷங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

Views: - 12

0

0