தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதினால் கிடைக்கும் நன்மைகளை அறிவோம் வாங்க!!!

Author: Poorni
12 October 2020, 5:07 pm
Quick Share

மிகவும் விலை மலிவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் ஒரு ருசியான ஜூஸ் எது தெரியுமா??? அது சாத்துக்குடி ஜூஸ் தான். எல்லா வகை உடல் பிரச்சினைகளுக்கும் ஏற்ற ஒரு அற்புதமான ஜூஸ் சாத்துக்குடி ஜூஸ். இதன் முக்கியமான சிறப்பு என்னவென்றால் இந்த ஜூஸை ஆறு மாத குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். மேலும் இது எல்லா நேரத்திலும் சுலபமாக கிடைக்கக்கூடிய பழம் இது. 

சாத்துக்குடி ஜூஸை தினமும் குடிப்பதினால் ஏற்படும் ஏற்படும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். சாத்துக்குடியில் வைட்டமின் C, டையட்டரி கால்சியம், இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், பாஸ்பரஸ் போன்ற அனைத்து முக்கிய சத்துக்களும் இப்பழத்தில் அடங்கும். சாத்துக்குடியின் தோலிலும் பல நன்மைகள் உள்ளது. 

சாத்துக்குடி தோலை காய வைத்து பொடியாக அரைத்து தினமும் சுடு தண்ணீரில் கலந்து குடித்து வர உடலில் உள்ள நச்சுகள் வெளியேறுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் பல மடங்கு அதிகரிக்கும். செரிமான கோளாறு, மலச்சிக்கல், வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு ஏற்ற பழம் சாத்துக்குடி. குடல் ஆரோக்கியமாக இருக்க ஒருவர் காலை எழுந்ததும் தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வர வேண்டும். 

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமானத்தை சீராக நடக்க உதவி செய்கிறது. இது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புவோர் காலை வெறும் வயிற்றில் நாள்தோறும் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம். மேலும் ஆஸ்துமா நோயினால் அவதிப்படுபவர்களும் வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வரலாம். சாத்துக்குடியில் உள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடென்டுகள் மற்றும் நோய் எதிர்ப்பு பண்புகள் ஆஸ்துமா நோயை குணப்படுத்த உதவுகிறது. 

Views: - 50

0

0