மது அருந்தும் பழக்கத்தை குறைப்பதால் அல்லது நிறுத்துவதால் என்னென்ன நடக்கும் தெரியுமா?

Author: Hemalatha Ramkumar
27 August 2021, 6:06 pm
What are the health benefits of drinking less?
Quick Share

இன்றைய காலகட்டத்தில் மது அருந்துவது ஒரு பொதுவான பழக்கமாக மாறிவிட்டது. ஆனால் இந்த மது பழக்கத்தால் பல்வேறு உடல் நல, மன நல பிரச்சினைகள் எல்லாம் ஏற்படக்கூடும். அப்போது மது பழக்கத்தை விட்டுவிட்டால் நல்லதா, என்னென்ன நல்லதெல்லாம் நடக்கும் என்பதை அறிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

நீங்கள் மது அருந்தும் பழக்கத்தைக் குறைத்துக்கொண்டால் உங்கள் வாழ்க்கைத் தரமும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் வியத்தகு முறையில் மேம்படும். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

1. உடல் எடைக் கட்டுக்குள் இருக்க உதவும்
2. ஆழ்ந்த, நிம்மதியான தூக்கம் கிடைக்கும்
3. உடல் சோர்வு நீங்கி ஆற்றல் அதிகரிக்கும்
4. மன நலம் ஆரோக்கியம் இருக்கும்
5. மூளையின் செயல்பாடு மேம்படும்
6. நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும்
7. உங்கள் பணம் மிச்சமாகும்
Helps to maintain good body appearance
Improves sleep quality
Increases energy level of your body  
Improves mental health
Improves brain function
Lower the risk of diseases
Saves your money

1. எடை இழப்பு

ஆல்கஹால் வெற்று கலோரிகளைக் கொண்டுள்ளது. அதாவது ஆற்றல் ஏதும் இல்லாமல் மற்றும் நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் ஏதும் இல்லாத கலோரிகளைக் கொண்டுள்ளது. 

இதை அறியாமல் நீங்கள் மதுவை அதிகமாக உட்கொள்வதால் உங்கள் எடை அளவுக்கு அதிகமாக அதிகரிக்கக்கூடும். 

தேவையற்ற கலோரிகளை உட்கொள்ளலைத் தவிர்க்க அல்லது குறைக்க மது அருந்துவதை குறைப்பது அல்லது தவிர்ப்பது மிகவும் நல்லது. 

உடலை நல்ல கட்டமைப்புடன் அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் மது அருந்துவதை கைவிடுவது நல்லது. 

2. தூக்கத்தின் தரம் மேம்படுத்தப்படும்

மது அருந்துவதன் காரணமாக போதையால் உங்களுக்கு மயக்கமே ஏற்படும். இதனால் உங்கள் உடலுக்கு ஓய்வு கிடைக்காது. மது அருந்திவிட்டு தூங்கும்போது தரமான தூக்கமும் கிடைக்காது. 

இதனால், உங்கள் உடல் வெகுவாக சோர்வடையும். மேலும் நாள் முழுக்க எந்தவொரு வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் போகும். 

எனவே, இரவு நேரத்தில் மது அருந்தும் பழக்கத்தை முற்றிலுமாக கைவிடுவது உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும், உடல் ஓய்வெடுக்கவும் உதவியாகவும் இருக்கும்.

3. உடலின் ஆற்றல் அதிகரிக்கும்

மது அருந்தும் பழக்கத்தை கைவிட்டு, இரவில் உங்களுக்கு நல்ல தூக்கம் கிடைத்தால், உயர் தரமான தூக்கம் கிடைக்கும். இதனால் நாள் முழுவதும் சோர்வேதும் இல்லாமல் ஆரோக்கியமாக வேலைச் செய்ய முடியும். இதனால், உங்கள் உடலின் ஆற்றல் மட்டங்கள் சீராக இருக்கும் என்பதை நீங்களே உணர முடியும்.

4. மேம்படுத்தப்பட்ட மன ஆரோக்கியம்

ஒரு முறை மது அருந்தும் பழக்கத்தை நீங்கள் ஆரம்பித்துவிட்டால், அதை தொடரவே உங்கள் மனம் ஏங்கும். மனச்சோர்வு, இது கவலை மற்றும் மன அழுத்த உணர்வுகளுக்கு எல்லாம் மதுவே மருந்து என நினைத்து மது அருந்துவதில் அர்த்தமில்லை. அவற்றை எல்லாம் சரி செய்ய பல்வேறு வழிகள் உண்டு. மது அருந்தும் பழக்கம் உங்கள் மன நலத்தை பாதிக்கும். இதனால் நீங்கள், குடும்ப இணைப்பையும், சமூக இணைப்பையும் இழக்க நேரும். எனவே மது அருந்தும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.

5. மூளை செயல்பாடு சீராகும்

மது பழக்கம் மூளையைப் பாதிப்பது மட்டுமல்லாமல், நீண்டகால நினைவாற்றல் இழப்புக்கும் வழிவகுக்கும். மது அருந்தும் பழக்கத்தைக் குறைப்பது அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தி சிறந்த கவனம் மற்றும் நினைவற்றலை மேம்படுத்த உதவும்.

6. நோய்களின் ஆபத்து குறையும் 

மது அருந்தும் பழக்கத்தைக் குறைக்கும்போது, உங்களுக்கு நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயமும் குறையும். மது அருந்துவதால் உங்கள் நோயெதிர்ப்பு ஆற்றல் சேதமடையக்கூடும் என்பதால் அதை தவிர்ப்பது நல்லது.

Views: - 711

0

0