கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் காலைப்பிணி, ஜீரணக்கோளாறு பிரச்சினைகளை போக்க சிம்பிள் டிப்ஸ்!

Author: Dhivagar
31 August 2021, 11:59 am
what are the nutritional, medicinal benefits of pudina
Quick Share

புதினா பல்வேறு உணவுகளில் ஒரு அலங்கரிக்கும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த புதினாவில், நாம் நினைத்தும் கூட பார்த்திராத பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளன. 

இந்த பதிவில் புதினாவின் ஊட்டச்சத்து நன்மைகள் மற்றும் வேறு சில நன்மைகள் பற்றி இந்த  பதிவில் பார்க்கலாம்.

புதினாவின் ஊட்டச்சத்து உண்மைகள்

  • 3 கிராம் புதினாவில்: 
  • கலோரிகள் – 2 
  • புரதம் – 0.2 கிராம்
  • கார்போஹைட்ரேட்டுகள் – 0.2 கிராம்
  • கொழுப்பு – 0 கிராம்
  • நார்ச்சத்து – 0.2 கிராம்

ஆகியவை இருக்கும்.

இது மட்டுமில்லாமல், புதினாவில் குறைந்த அளவு பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின்கள் A& C, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்களும் அடங்கியிருக்கும். 

உங்கள் ஆரோக்கியத்தைப் பராமரிக்க நீங்கள் அதிக அளவில் புதினாவை உட்கொள்ள வேண்டிய தேவையில்லை, சிறிது அளவு புதினா எடுத்துக்கொண்டாலே உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிக்க புதினாவை உங்கள் உணவு வழக்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

புதினாவால் ஏற்படும் சில முக்கியமான நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

காலைப்பிணியை நீக்குகிறது

கர்ப்பிணி பெண்களுக்கு, தூங்கி எழுத்தும் காலையில் ஒரு மந்தமான, தலைச்சுற்றும் மற்றும் குமட்டல் உணர்வு உண்டாகுமாம். காலையில் பிரெஷான புதினா இலைகளை நுகர்ந்து பார்ப்பது அல்லது மென்று சாப்பிடுவது அல்லது புதினா தேநீர் குடிப்பது குமட்டலைக் கட்டுப்படுத்த உதவும். கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் காலைப்பிணியால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு இந்த புதினா வைத்தியம் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எளிதில் ஜீரணமாகும்

இந்தியாவின் பழங்கால மருத்துவ நடைமுறையான ஆயுர்வேதம், உணவில் புதினாவைச் சேர்த்துப் பயன்படுத்த பரிந்துரைக்கிறது. புதினா உடலுக்கு குளிர்ச்சி ஊட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. தவிர, இது கிருமி நாசினிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு போன்ற பண்புகளையும் கொண்டிருப்பதால் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த இது மிகவும் உதவியாக இருக்கும். உடலுக்கு எந்தவித அசௌகரியத்தையும் ஏற்படுத்தாமல் உணவை ஜீரணிக்க உதவியாக இருக்கும்.

ஸ்ட்ரஸ் பஸ்டர்

ஒரு துளி புதினா எண்ணெயை எடுத்து நெற்றியில் படர தடவினால் உங்கள் மனம் அமைதியடையும். மேலும், இந்த எண்ணெய் உங்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து நிவாரணம் அளிக்க மிகவும் உதவியாக இருக்கும். உங்கள் மனம் அமைதியாகவும் அழுத்தம் இல்லாமலும் இருக்க புதினா எண்ணெய் பயன்படுத்துவது நல்ல பலனைக் கொடுக்கும்.

சருமத்தின் தரத்தை மேம்படுத்தும்

புதினாவில் இருக்கும் மெந்தோல் மற்றும் சாலிசிலிக் அமிலத்தின் கலவையானது உங்கள் சருமத்தில் ஒரு மாயாஜால விளைவை ஏற்படுத்தும். உங்கள் சருமத்தை பளபளப்பாக்குவதற்கும் முகப்பருவை அகற்றுவதற்கும் புதினாவை உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த மூலிகையில் உள்ள வைட்டமின் A, எண்ணெய் சுரப்பை ஒழுங்குபடுத்தும், இதனால் நீங்கள் அழகான, கறை இல்லாத அப்பழுக்கற்ற சருமத்தை பெற முடியும்.

பல் ஆரோக்கியத்திற்கு நல்லது

புதினாவை மெல்வதால் உங்கள் பல் ஆரோக்கியம் மேம்படும் என்று “அமெரிக்க டென்டல் அசோசியேஷன்” அங்கீகரித்துள்ளது. இந்த அறிவிப்பு புதினாவின் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை ஆராய்ந்த பிறகு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது உங்கள் பற்குழியை முழுவதுமாக சுத்தம் செய்வது மட்டுமல்லாமல் உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், புதினா மெல்வதால் உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்கிறது, உங்கள் வாயில் உள்ள அதிகப்படியான அமிலத்தை உங்கள் உடலுக்குள் செல்லாமல் அகற்ற இது உதவுகிறது.

எடை இழப்பை ஊக்குவிக்கும்

புதினாவில் செரிமான நன்மைகள் இருப்பதால், இது உங்கள் எடையை குறைக்க உதவும். உங்கள் உணவில் புதினா சேர்ப்பதால், இரைப்பை நொதிகளைத் தூண்டி உணவை விரைவாக உறிஞ்ச உடலுக்கு உதவும். இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும். எனவே, உங்கள் உடல்நலத்தை பாதிக்காமல் உங்கள் உடல் எடை அதிகரிக்காமல் இருப்பீர்கள்.

Views: - 754

0

0