பிள்ளைகள் பொய் கூறாமல் இருக்க பெற்றோர்கள் என்ன செய்யலாம்…???

19 April 2021, 8:54 pm
Quick Share

பொய் சொல்வது பெரும்பாலும் ஒரு கெட்ட பழக்கமாகக் கருதப்படுகிறது. இது சிக்கலை ஏற்படுத்துகிறது. பொய் கூறுவது ஒருவரின் உணர்வுகளை புண்படுத்தும் மற்றும் குழப்பத்தை உருவாக்கும்.  நேர்மையாக இருப்பது மற்றும் அடுத்தவர்களின்  உணர்வுகளை ஒப்புக்கொள்வது எப்போதும் நல்லது. குழந்தைகள் பெற்றோரிடம் ஏன் பொய் சொல்கிறார்கள் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.  அவர்களின் உண்மையான நோக்கங்களை மறைத்து வைப்பது மற்றும் பிடிபட்டு விடுவோமோ என்ற பயம் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

ஸ்ட்ரிட்க்கான  பெற்றோர்களின் பிள்ளைகள் பெரும்பாலும் பொய்யர்களை உருவாக்குகிறார்கள்.  உண்மையைச் சொல்வதற்கு தைரியம் தேவை. குழந்தைகளுக்கு தைரியமோ நம்பிக்கையோ இல்லாதபோது, ​​அவர்கள் பெரும்பாலும் பொய் சொல்கிறார்கள்.

குழந்தைகள் பெற்றோர் தங்களை திட்டுவதைத்  தவிர்க்க விரும்புகிறார்கள்.  அவர்களுடன் வாக்குவாதம் செய்வதும், பரபரப்பாக பேசுவதும் அவர்களுக்கு பிடிப்பதில்லை. இதைத் தவிர்க்க, அவர்கள் எளிதான வழியைத் தேர்ந்தெடுத்து உங்களிடம் பொய் சொல்கிறார்கள். இருப்பினும், பொய் சொல்வது ஒரு கெட்ட பழக்கமாக விரைவாக மாறும். இது தீவிரமடைவதற்கு முன்பு, அதனைத் தடுக்க வேண்டும்.

பொய் கூறுவதை நிறுத்தி, நேர்மையான பாதையில் செல்ல உங்கள் குழந்தைகளை ஊக்குவிக்க சில வழிகள் உள்ளன. அது குறித்து இப்போது பார்க்கலாம்.

1. இயற்கை விளைவுகளை அவர்களுடன் கலந்துரையாடுங்கள்:

உங்கள் குழந்தைகள் அனைத்து அறிவோடும் பிறக்கவில்லை. அது அவர்களுக்கு படிப்படியாக வழங்கப்பட வேண்டும். பொய்யின் பின்விளைவுகளைப் பற்றி அவர்களுக்கு எடுத்து உரைத்து, உண்மையான சம்பவங்களை அவர்களுக்கு எடுத்துக்காட்டாக கூறுங்கள். பொய் சொல்வதற்கும் உண்மையைச் சொல்வதற்கும் உள்ள வித்தியாசத்தை அவர்களுக்குச் சொல்லுங்கள். இதன் மூலம், அவர்கள் உங்களை  புரிந்துகொண்டு பொய் கூறுவதை முடிவுக்குக் கொண்டுவருவார்கள்.

2. ஒரு நண்பராக இருக்க முயற்சி செய்யுங்கள்: 

பெற்றோர் மற்றும் உங்கள் குழந்தைகளின் சிறந்த நண்பராக இருப்பதற்கு இடையில் ஒரு சமநிலையை உருவாக்க நீங்கள் கற்றுக்கொள்ள  வேண்டும். அப்போது தான் உங்கள் குழந்தைகள் சிக்கலில் இருக்கும் போதெல்லாம் உங்கள் ஆலோசனையைப் பெற வருவார்கள். எப்போதும் அவர்களை திட்டிக்கொண்டே இருக்காதீர்கள். ஒரு நண்பர் போல அவர்களை வழி நடத்துங்கள்.

3. அவர்களின் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்:

அவர்களின் நம்பிக்கை மற்றும் மரியாதையைப் பெற முயற்சி செய்யுங்கள். உங்கள் பிள்ளைகள் உங்களை உணர்வுபூர்வமாக நெருங்கி வருவதற்கும் அவர்களுடன் ஒரு பிணைப்பை உருவாக்குவதற்கும் ஒரு அடித்தளத்தை உருவாக்குங்கள். இந்த வழியில், அவர்கள் உங்களை நம்பத் தொடங்குவார்கள். மேலும்  பொய் சொல்ல மாட்டார்கள்.

4. நேர்மையின் மதிப்பை வலுப்படுத்துங்கள்: 

நேர்மையாக இருப்பதன் மதிப்புகள் மற்றும் முக்கியத்துவத்தை வலுப்படுத்த முயற்சிக்கவும். அவர்கள் நேர்மையாக இருக்க முயற்சிக்கும்போது அவர்களுடன் பொறுமையாக இருங்கள்.  இந்த யோசனையை அவர்களிடம் அடிக்கடி  வலுப்படுத்திக் கொண்டே இருங்கள்.

Views: - 80

0

0