ஈரமான தலைமுடியுடன் தூங்குவதால் என்ன நடக்கும்…???

23 February 2021, 7:14 pm
Quick Share

இரவு நேரத்தில் சூடான தண்ணீரில் தலைக்கு குளித்து விட்டு தூங்கும் சுகமே தனி. ஒரு பரபரப்பான நாளுக்குப் பிறகு நம்மை அமைதியாக உணர இது உதவும். இது தூக்கத்தை விரைவாகவும் சிறப்பாகவும் பெற உதவுகிறது. ஆனால், இதில் விஷயம் என்னவென்றால் இரவு குளித்து விட்டு ஈரமான  தலைமுடியோடு படுக்க சென்றுவிடுவீர்களா…? 

நாம் அதில் அதிக கவனம் செலுத்தாமல் போகலாம்.  இது மிகச் சிறந்த காரியம் அல்ல. உங்கள் தலைமுடியை ஈரத்தோடு வைத்து தூங்குவது நல்லதை விட தீங்கு விளைவிக்கும். இதனால் என்னென்ன தீங்கு ஏற்படும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 

பொதுவாக நாம் நீண்ட நேரம் தண்ணீரில் நம் கைகளை ஊற  வைக்கும்போது உங்கள் விரல்கள் சொத சொதவென்று மாறுவதை நீங்கள் கவனிக்கலாம்.  உங்கள் தலைமுடியிலும் இதேதான் நடக்கும். உங்கள் தலைமுடி ஈரமாக இருக்கும்போது, ​​அது பலவீனமான இழைகளை மென்மையாக்குகிறது. மேலும் நீங்கள் தலையணையில் தூங்கும் போது அது உடைந்து விழும் வாய்ப்புள்ளது. இந்த மென்மையாக்கம் அவ்வப்போது நடந்தால் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தாது, ” ஆனால் நீங்கள் வழக்கமாக ஈரமான கூந்தலுடன் தூங்கினால், உங்கள் தலைமுடியை அதிக ஆபத்தில் வைக்கலாம். 

சேதம் என்பது முடி உடைப்புக்கு மட்டுமல்ல. ஈரமான முடி என்றால் ஈரமான உச்சந்தலை என்று பொருள். இது பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மேலும் வீக்கத்தை ஏற்படுத்தி மேலும் முடி சேதத்தை ஏற்படுத்தும். 

கூடுதலாக, நீங்கள் துண்டு போடாமல் உங்கள் தலைமுடியை உலர்த்தி தூங்கச் செல்லும்போது, ​​அது உச்சந்தலையில் வறட்சிக்கு வழிவகுக்கும். உச்சந்தலையில் உலர்ந்த சருமம் அதிக எண்ணெய் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக உங்கள் தலைமுடி க்ரீஸ் மற்றும் எண்ணெய் மிக்கதாக இருக்கும்.

Views: - 3

0

0