பைட்டோ தெரபி என்றால் என்ன? எடைகுறைக்க உதவும் இதை பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும்

13 July 2021, 5:47 pm
What is phytotherapy; know everything about its healthy side
Quick Share

பைட்டோ தெரபி என்பது இயற்கையான முறையில் இயற்கை மூலிகைகள் மற்றும் அவற்றின் சாறுகளை கொண்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் எடை இழக்கச் செய்யும் சிகிச்சை முறையாகும். இது அலோபதி மருத்துவ முறையில் பல வருடங்களாக பயன்படுத்தப்படும் ஒரு மருத்துவ முறையாகும். இதில் வெவ்வேறு மூலிகை தாவரங்கள், அவற்றின் பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

இந்த நவீன காலகட்டத்தில் மாறுபட்ட நவீன உணவு முறைகளாலும் உட்கார்ந்தே வேலை செய்யும் பணி சூழலாலும் பலரும் அதிக எடைபிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் இதய குறைபாடு, சர்க்கரை நோய் போன்ற பிரச்சினைகளால் பலரும் அவதிப்படுகின்றனர். இதற்கு இயற்கை முறையில் சிகிச்சை அளிக்கும் செயல்முறைக்கு தான் பைட்டோ தெரபி என்று பெயர். சொல்லப்போனால், இதற்கு வீடே மருத்துவமனை தான். ஆம், நாம் அன்றாடம் நம் வீடுகளில் பயன்படுத்தும் பொருட்களே மூலிகை தான். அளவோடு உண்டு இந்த மூலிகைப் பொருட்களையும் நம் உணவு முறையில் சேர்த்து வந்தாலே உடல் எடைக்கூடாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.

நம் உடலின் இயந்திரம் செரிமான அமைப்பு தான். உடல் திறமையாக செயல்பட அதற்கு எரிபொருள் தேவைப்படுகிறது. அது தான் நாம் உட்கொள்ளும் உணவு. எனவே அது இயங்க தேவையான உணவை மட்டுமே கொடுக்க வேண்டும். அதிகமாக கொடுக்கும்போது தான் இங்கு பிரச்சினையே ஆரம்பம் ஆகிறது. 

எனவே ருசிக்கு சாப்பிடாமல் பசிக்கு சாப்பிட்டு வந்தாலே உடல் நலமுடன் இருக்கும். ருசிக்கு சாப்பிட்டாலும் அளவோடு சாப்பிட வேண்டும். அதே நேரத்தில் நம் உணவில் பெருங்காயம், சீரகம், இஞ்சி, துளசி இலைகள் போன்ற தாவரத்திலிருந்து இயற்கையாக நேரடியாக கிடைக்கும் பொருட்கள் நம் செரிமான அமைப்பை சீராக வைத்துக்கொள்ளும். வயிறு, சிறுநீரகம், கல்லீரல் மற்றும் பித்தப்பை போன்ற பிரதான செரிமான உறுப்புகள் எல்லாம் ஒழுங்காக செயல்பட இந்த மூலிகைகள் மிகவும் உதவியாக இருக்கும். 

அதே போல கடைகளில் வாங்கும் காபி பொடி, டீ தூள் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தாமல் இயற்கையாக நம் வீட்டில் இருக்கும் கொத்தமல்லி விதைகள், சீரகம், வெந்தயம், சுக்கு போன்றவற்றில் தேநீர் தயார் செய்து குடிக்கலாம். 

செவ்வந்தி, அஸ்வகந்தா அல்லது லாவெண்டர் தேநீர் அல்லது இயற்கையான எண்ணெய் வகைகளை பயன்படுத்துதவதால் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். டோபமைன் மற்றும் செரோடோனின் போன்ற மன அழுத்த எதிர்ப்பு ஹார்மோன்களை அதிகரிப்பதற்கும், இரத்த அழுத்த அளவைக் குறைப்பதற்கும் மூலிகை டீக்களை குடிக்கலாம். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ரோஸ்மேரி அல்லது துளசி தேநீர், தூக்கமின்மை, நினைவாற்றல் இழப்பு மற்றும் மனநிலை மாற்றங்களை குணப்படுத்த ஒரு முக்கிய ஆக்ஸிஜனேற்றியாகும்.

ஒரு உடல் நச்சுகளை வெளியேற்றி ஆரோக்கியமாக இருக்க மஞ்சள், பெருஞ்சீரகம், சியா விதைகள் மற்றும் சீரகம் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இவை ரத்த சுத்திகரிப்பு மற்றும் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளுக்கு சிறந்த ஆக்ஸிஜனேற்றிகள் ஆகும். சேதப்படுத்தும் நச்சுக்களை அகற்றுவதன் மூலம், உடல் சிறப்பாக செயல்படுகிறது மற்றும் தேவையற்ற கலோரிகளை எரிக்க முடியும்.

இதே போல இயற்கை முறையில் விளைவிக்கப்படும் அரிசி, பழங்கள், கீரைகள் போன்றவற்றை சாப்பிடுவதால் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் மேம்படும். 

Views: - 172

0

0

Leave a Reply