தீடீரென ஏற்படும் தசைவலிக்கு வீட்டிலே செய்யலாம் மருத்துவம்!!!!

23 May 2020, 4:00 pm
what-is-the-treatment-for-sudden-muscle pain
Quick Share

எந்த ஒரு காயமும் ஏற்படாமல் உங்கள் தசைகளில் வலியை உணர்ந்திருக்கிறீர்களா??? நீங்கள் நடக்கும் போது அல்லது தூங்கி கொண்டு இருக்கும் போது தீடீரென ஒரு வலி ஏற்படும். எதனால் இந்த வலி ஏற்படுகின்றது என உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். பெரும்பாலும் இந்த வலியானது தொடை, கால் மற்றும் உள்ள தசைகளில் ஏற்படும். இதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது. ஆனால் இந்த வலி உங்களை எரிச்சல் அடைய செய்யலாம்.

இந்த தசை வலி பல காரணங்களால் ஏற்படும். தசைகளை அதிகமாக பயன்படுத்துவது, காயம், நீர்ச்சத்து குறைவு போன்றவை தசைகளில் வலியை உண்டாக்கும். மேலும் உடலில் குறைந்த அளவு கால்சியம், பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் இருந்தாலும் இந்த வலி தோன்றும். அல்லது கால்களுக்கு குறைவான இரத்த ஓட்டம் இருந்தாலும் தசைகளில் வலி ஏற்படலாம். இப்போது இதனை நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எப்படி சரி செய்வது என பார்க்கலாம்.

★குளிர்ந்த ஒத்தடம்:

தசைகளில் ஏற்படும் வலிக்கு சிறந்த ஒரு வலி நிவாரணியாக கருதப்படுவது குளிர்ந்த ஒத்தடம். வலி இருக்கும் இடத்தில் ஐஸ் கட்டிகளை வைத்து வரும்போது வலியானது இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறது. விளையாட்டுகளின் போது ஏற்படும் காயங்களினால் ஏற்படும் வலிக்கு பெரும்பாலும் இந்த ஐஸ் ஒத்தடம் தான் கொடுக்கப்படுகிறது. ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டி குறைந்தது 15 நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

what-is-the-treatment-for-sudden-muscle pain

★சூடான ஒத்தடம்:

குளிர்ந்த ஒத்தடம் போலவே சூடான ஒத்தடமும் வலி போக்குவதில் சிறந்தது. சூடான ஒத்தடமானது இறுகி போன தசைகளை தளர்வடைய செய்து வலியை குறைக்க உதவும். இதற்கு உங்களிடம் ஹீட்டிங் பேடு இருந்தால் பயன்படுத்தி கொள்ளலாம். அல்லது சூடான நீரில் ஒரு துணியை முக்கி எடுத்து வலி இருக்கும் இடத்தில் 15 – 20 நிமிடங்கள் ஒத்தடம் கொடுத்து வாருங்கள்.

★மசாஜ்:

எதற்கென்றே தெரியாமல் தசைகளில் தோன்றும் வலிக்கு, வலி இருக்கும் இடத்தை நன்றாக மசாஜ் செய்து வர வலி பறந்து போய்விடும். மேலும் மசாஜ் செய்யும் போது அந்த இடத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து காணப்படும். வலி இருக்கும் இடத்தில் கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவி பத்து நிமிடங்கள் தொடர்ந்து மசாஜ் செய்ய வேண்டும். இதனை ஒரு நாளைக்கு மூன்று முறை செய்து வர நல்ல மாற்றம் தெரியும்.

★ஆப்பிள் சிடர் வினிகர்:

அனைத்து விதமான வீட்டு வைத்தியங்களிலும் இது சிறந்தது. ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் வலி போக்கும் தன்மை கொண்ட ஆப்பிள் சிடர் வினிகரானது வலியை போக்குவதோடு இந்த வலி மீண்டும் ஏற்படாமல் பார்த்து கொள்கிறது. பொட்டாசியம் குறைப்பாட்டினால் ஏற்படும் தசை வலிக்கு பொட்டாசியம் நிறைந்த இந்த ஆப்பிள் சிடர் வினிகர் ஒரு அருமையான மருந்து. ஒரு பெரிய குளிக்கும் டப்பில் தண்ணீர் எடுத்து கொள்ளவும். அதில் இரண்டு கப் ஆப்பிள் சிடர் வினிகர் ஊற்றி கால்களை அதில் 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

★செர்ரி பழச்சாறு:

ஆன்தோசையானின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்டுகள் செர்ரி பழத்தில் மிகுதியாக உள்ளது. இது உள்ள வீக்கத்தை குறைத்து வலியை போக்கும். குறிப்பாக உடற்பயிற்சியினால் ஏற்படும் தசை வலிக்கு இது ஒரு சிறந்த தீர்வினை தரும். எனவே உடற்பயிற்சி செய்யும் போது தினமும் செர்ரி ஜூஸை பருகி வாருங்கள்.

Leave a Reply