பாமாயில் உடலுக்கு கெடுதல் மட்டுமே செய்கிறது என யார் சொன்னது…..உண்மைய தெரிஞ்சுக்க இத படிங்க!!!

11 November 2020, 9:24 pm
Quick Share

பாமாயில் பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் பாமாயில் பற்றிய ஒரு பொதுவான கருத்து என்னவென்றால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு எண்ணெய் என்பது தான். பனை மரங்களில் இருந்து கிடைக்கும் பழங்கள் மூலம் தயாரிக்கப்படும் பாமாயிலில் வைட்டமின் E அதிக அளவில் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இது ஒட்டுமொத்தமாக உடலுக்கு கெட்டது என ஒதுக்கி விட முடியாது. பாமாயில் எடுத்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பை கட்டுப்படுத்த பாமாயில் பெரிதும் உதவுகிறது. வைட்டமின் A குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த எண்ணெய் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் வைட்டமின் E யின் அதிக அளவை பாமாயில் கொண்டுள்ளது. உடல் ஆரோக்கியம் மட்டும் அல்லாமல் அழகு பராமரிப்பிலும் பாமாயில் சலைத்தது அல்ல. 

செல்களில் பாதிப்பை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கக் கூடிய டோகோபெரால்கள் மற்றும் டோகோட்ரியெனோல்கள் பாமாயிலில் உள்ளது. இது நம் சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். இவை அனைத்தும் ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

பாமாயில் பயன்படுத்துவது பற்றி நீங்கள் பயப்பட தேவையில்லை. இப்போது பாமாயிலை நம் அன்றாட உணவில் எப்படி சேர்ப்பது என்பதை இப்போது பார்க்கலாம். நார்மலாக நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்க்கு பதிலாக பாமாயிலை நீங்கள் பயன்படுத்தலாம். 

அப்படி இல்லையெனில் மாற்று நாட்களில் கூட நீங்கள் பாமாயிலை பயன்படுத்தலாம். வெண்ணெய்க்கு பதிலாகவும் நீங்கள் பாமாயிலை உபயோகித்து வரலாம். ஊறுகாய், சாஸ், சாலட்  செய்யும் போது பாமாயிலில் சில துளிகளை பயன்படுத்தலாம். சப்பாத்தி மாவு பிசையும் போது நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் எண்ணெய்க்கு பதிலாக பாமாயிலை பயன்படுத்துங்கள். 

பாமாயில் ஆக்ஸிஜனேற்றியாக விளங்குவதால் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தில் நடைபெறும்  சைட்டோபுரோடெக்டிவ் செயல்களை துரிதப்படுத்துவதில் பாமாயில் பெரும் பங்கு வகிக்கிறது. வைட்டமின் E சாற்றின் முழுமையான நன்மைகளை அடைய உங்கள் உணவில் தாராளமாக நீங்கள் பாமாயிலை சேர்த்து வரலாம். என்ன நண்பர்களே… பாமாயிலை பற்றிய பயம் இப்போது போய்விட்டதா…. இனி சரியான முறையில் பாமாயிலை பயன்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவியுங்கள். 

Views: - 23

0

0