நாம் சாப்பிடும் உப்பில் அயோடின் இருக்க வேண்டுமென்று சொல்வதன் காரணமென்ன?

23 June 2021, 12:09 pm
Why is the use of iodized salt advisable
Quick Share

சுமார் 8000 ஆண்டுகளுக்கும் மேலாக நம் சமையலறையில் நாம் உப்பு என்ற ஒன்றை பாரம்பரியமாக பயன்படுத்திக்கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் சமீப காலமாக அயோடைஸ்டு உப்பு தான் பயன்படுத்த வேண்டும் என்று பலரும் பரிந்துரைப்பதற்கான காரணத்தை தெரிந்துக்கொள்வோமா…

Why is the use of iodized salt advisable

கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பியால் உற்பத்தி செய்யப்படும் தைராய்டு ஹார்மோன்கள் தான் ஒரு மனிதன் கருவாய் உருவான நாள் முதல் வாழ்வின் இறுதி நாள் வரை, தலை முதல் கால் வரை அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தைராய்டு சுரப்பி பட்டாம்பூச்சி வடிவிலானது. இந்த சுரப்பி சீராக செயல்பட அயோடின் தான் மிக முக்கியமான தேவை என்கிறது அறிவியல். நம் உடலுக்கு ஒரு கேடயமாக செயல்படுவதும் இந்த தைராய்டு சுரப்பி தான். உண்மையில் சொல்லப்போனால் Thyreos என்றால் கிரேக்க மொழியில் கேடயம் என்று பொருள். இதனாலேயே இதற்கு தைராய்டு சுரப்பி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தைராக்ஸின் ஹார்மோன் உற்பத்திக்கு தைராய்டு சுரப்பிக்கு அயோடின் தேவைப்படுகிறது. இந்த ஹார்மோன் நம் உடலில் உள்ள கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் ஆகியவற்றின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. உணவில் அயோடினின் அளவு தேவைப்படுவதை விட குறைவாக இருந்தால், தைராய்டு சுரப்பி விரிவடைவதால் கழுத்து வீக்கமடைந்து Goitre என்ற பிரச்சினை ஏற்படும். இதனால் தைராய்டு சுரப்பி சீராக செயல்பட அயோடின் சேர்க்கப்பட்ட உப்பை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

அயோடின் ஒரு கனமான கனிமம் என்பதால் இது பூமியின் மேல் அடுக்கில் குறைவாகவே காணப்படும். அதுவும் இல்லாமல் நாம் உண்ணும் காய்கறிகளிலும் அல்லது இறைச்சியிலும் கூட இது மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும், சர்க்கரையை விட உப்பு மிக மலிவானது மற்றும் சிறந்தது என்பதால், உடலில் அயோடினைச் சேர்க்க உப்பு தேர்ந்தெடுக்கப்படுகிறது. அயோடினை உடலில் சேர்க்க உப்பு தேர்ந்தெடுக்கபட்டத்தை அடுத்து, பொட்டாசியம் அயோடைடு, சோடியம் அயோடைடு, பொட்டாசியம் அயோடேட்,  மற்றும் சோடியம் அயோடேட் ஆகிய நான்கு அயோடின்கள் தனித்தனியாக அல்லது ஒன்றாக உப்புடன் சேர்க்கப்படுகின்றன.

Why is the use of iodized salt advisable

அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானி டேவிட் கோவி, பொதுவாக மலைப்பகுதிகளின் மண்ணில் அயோடின் குறைவு என்பதால் மலைவாழ் மக்களிடையே Goitre எனும் முன்கழுத்துக்கழல் வீக்கம் அதிகம் ஏற்படுவதை கவனித்தார். இதையடுத்து 1920 களில் சோடியம் அயோடைடு உடன் கூடிய உப்பைப் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். Goitre போன்ற நோய்க்கு இது சிறந்த தீர்வாக இருந்ததை அடுத்து உப்பில் அயோடின் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்து எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் வருகிறது. 

உலகெங்கிலும் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில், கோடிக்கணக்கான மக்கள், குறிப்பாக நம் நாட்டில் மட்டும் இருபது கோடி மக்கள் இந்த அயோடின் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வாக முதலில் பிரேசில் அரசு அயோடின் கலந்த உப்பினை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததை அடுத்து மற்ற நாடுகளும் அதை பின்பற்ற தொடங்கின.

1962 ஆம் ஆண்டில் நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடைமுறை இப்போது கிட்டத்தட்ட 75% க்கும் அதிகமான மக்களை எட்டியுள்ளது, மேலும் இந்த அயோடின் உப்பை மக்களிடம் கொண்டு செல்வதில் டாடா உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்க தகவல்களில் ஒன்று.

Why is the use of iodized salt advisable

உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்று சொல்வார்கள், ஆக நம் உணவுக்கு இனிமை சேர்க்கும் உப்பில் எந்த அளவுக்கு நன்மைகளும் நிறைந்து உள்ளது என்பதை நாம் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் கடைகளில் உப்பு வாங்கும்போதும் அயோடின் சேர்த்த  உப்பை மட்டுமே வாங்குவோம். 

Views: - 183

0

0