உடலின் நிறம் என்னவாக இருந்தாலும் அந்தரங்க உறுப்புகள் கருமையாக இருக்க காரணம் என்ன?

19 January 2021, 10:47 am
What is the reason why only the genitals are dark, regardless of the color of the body ..?
Quick Share

பல நேரங்களில் நம்முள் எழும் ஒரு அந்தரங்க கேள்வி என்னவென்றால், மற்ற உடல் உறுப்புகளை விட அந்தரங்க உறுப்புகள் மட்டும் கருமையாக இருக்க காரணம் என்ன? உடல் வெண்மையாகவும் அழகாகவும் இருக்கும் போது… ஆண்குறி மற்றும் பெண்குறி மட்டும் கருமையாக அழகான தோற்றத்தில் இல்லாமல் இருப்பது ஏன்.. இதற்கு காரணம் என்ன..? 

இது போன்ற கேள்விகள் நம்முள் எழுந்தாலும், இதை கேட்க கூச்சப்பட்டுக்கொண்டு அப்படியே விட்டுவிடுவோம், இல்லையென்றால் செயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி அழகுபடுத்த முயற்சிப்போம். அதற்கான உண்மையான காரணத்தை அறிந்துக்கொள்ள முயல்வதே இல்லை. ஆனால், இதைப் பற்றியும் நாம் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும். நம் நாட்டில் வெள்ளை நிறத்துக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கருப்பு என்றாலே அழுக்கு என்பது போன்ற ஒரு மாயை நம்முள் உள்ளது. மேலும், பல மக்கள் தங்கள் பிறப்புறுப்புகள் மற்ற உறுப்புகளை விட கருப்பாக இருக்கிறதே என்று நினைத்து பயப்படவும் கவலையிலும் இருக்கின்றனர்.

அவர்களின் பிறப்புறுப்புகளை வாழ்க்கைத் துணைக்குக் காண்பிப்பதற்குக் கூட பயமாகவும் அசிங்கமாகவும் நினைக்கிறார்கள். ஒரு வேளை துணைப் பார்த்தால் அவர்களுக்குப் பிடிக்காமல் போய்விடுமோ என்று கருதுகின்றனர். உண்மை என்னவென்றால், இதைப்பற்றி நீங்கள் பயப்படவோ அசிங்கமாக நினைக்கவோ ஒன்றும் இல்லை.  உங்கள் பிறப்புறுப்புகள், பிட்டம், உள் தொடைகள் போன்றவை கருப்பு நிறமாக இருப்பது ஒரு இயல்பான விஷயம் தான்.

அதேபோல் ஒவ்வொரு வகை மக்களுக்கும் பிறப்புறுப்புகளின் நிறம் வேறுபட்டிருக்கும். அந்த வகையில் இந்தியர்களுக்கு பிறப்புறுப்புகள் கருப்பு நிறத்தில் தான் இருக்கும். இது மரபணுவைப் பொறுத்து இயற்கையாக அமையும் ஒரு விஷயம். எனவே உடல் நிறம் வெண்மையாகவும், பிறப்புறுப்புகள் மட்டும் கருமையாகவும் இருக்கிறதென்றால் நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் பிறப்புறுப்பு கருப்பாக இருப்பதால் நீங்கள் அதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவில்லை என்று அர்த்தமில்லை. அது இயற்கைத்தான். அது அழுக்கும் அல்ல அசிங்கமும் அல்ல. அதுவும் சாதாரண சருமம் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பாலிவுட் பிரபலங்கள், ஆபாச திரைப்பட நடிகர் நடிகைகள் அவர்களின் தனிப்பட்ட பகுதிகளைக் காண்பிப்பார்கள், அது கருமை நிறத்தில் இருக்காது. ஏனென்றால் அவர்கள் அந்த இடமெங்கும் மேக்கப் போட்டுக்கொள்வார்கள் அல்லது ஃபோட்டோஷாப் மூலம் அதை அழகுபடுத்திக் காண்பிப்பார்கள். அது இயற்கையானது கிடையாது என்பதையும் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். எனவே, உடல் முழுவதும் ஒரே மாதிரியான நிறத்தை யாரும் கொண்டிருக்க முடியாது என்பதையும் நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். எனவே அடர் நிறம் என்பது சாதாரணமானது மற்றும் இயற்கையானது.

அதுமட்டுமல்லாது, மக்களில் பலரும் விலையுயர்ந்த கிரீம் மற்றும் லோஷன்களை வாங்கி தங்கள் அந்தரங்க உறுப்புகளை வெண்மை நிறமாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். ஆனால் அது தேவையற்ற செயல் மற்றும் முற்றிலும் தவறான போக்கு. நீங்கள் பயன்படுத்தும் போது அப்போதைக்கு அழகாக இருக்குமே தவிர இது நீண்ட நாட்கள் வேலை செய்யாது. கூடுதலாக பின் விளைவுகளும் கூட ஏற்பட வாய்ப்புகள் உண்டு. 

இது போன்ற செயற்கை அழகுபடுத்துதல் பிறப்புறுப்பு பகுதியில் எரிச்சலை ஏற்படுத்தும், இதனால் உணர்ச்சித் திறனை இழக்க நேரலாம், அந்தரங்க இடம் சிவப்பு நிறமாக மாறலாம், அரிப்பு ஏற்படலாம். அத்தோடு தேமல், நிரந்தர கீறல்களும் கூட  ஏற்படலாம். 

எனவே, நீங்கள் செயற்கையாக அழகுபடுத்தும் முயற்சிகள் எதையும் முயற்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தரங்க உறுப்புகள் கருமையாக இருப்பது இயல்பானது மற்றும் இயற்கையானது. அதை அப்படியே இருக்க விட்டுவிடுவது நல்லது.  நீங்கள் நீங்களாகவே இருங்கள். செயற்கை என்றும் நிலைக்காது. மக்கள் நலனில்  அக்கறையுடன் updatenews360.

Views: - 1

0

0