பாதாம் உங்களுக்கு பிடிக்குமா? இதை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கிற நன்மை என்னென்ன தெரியுமா!

13 May 2021, 7:58 am
why to soak badam in water
Quick Share

நம்ம வீட்டில் பலகாரம், கேசரி, பாயசம் போன்றவற்றை எல்லாம் சமைக்கும் போது அதில் போடுவதற்காக முந்திரி,பாதாம், உலர் திராட்சை எல்லாம் அம்மா வைத்திருப்பார்கள். அம்மாவுக்கு தெரியாமல் அதை எப்படியாவது எடுத்து சாப்பிட்டு சந்தோசப்படுவோம். அம்மாவும் தெரிந்தாலும் தெரியாதது இருப்பார்கள். ஏனென்றால் இது உடலுக்கு நல்லது என்பதால் தான். ஆனால், நாம் பெரிதான பிறகு உடலமைப்பை மாற்றுபவர்கள், ஆரோக்கியமாக இருப்பவர்கள் எல்லாம் இதை தினமும் சாப்பிடுவதையும் நாம் பார்க்கிறோம். அதுவும் இதை நீரில் ஊறவைத்து தான் சாப்பிடுவார்கள். அப்படி இந்த பாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? அதை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

செரிமானம் சீராக இருக்கிறதா இல்லையா என்பதை நம் முகமே காட்டிக்கொடுத்து விடும். செரிமான பாதை சீரற்று இருந்தால், மலச்சிக்கல் ஏற்படலாம். மலச்சிக்கல் பிரச்சினை தொடர்ந்து ஏற்பட்டால், முகப்பரு வர ஆரம்பிக்கும். அதற்கு வைத்தியமாக தினமும் காலையில் ஊறவைத்த பாதாமை சாப்பிட்டால், அது வயிற்றில் வளரும் பாக்டீரியாக்களின் அளவை அதிகரித்து, செரிமானத்தை ஒழுங்குபடுத்தும். இதனால் மலச்சிக்கல் பிரச்சினையும் இருக்காது, ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கலாம்.

உங்கள் முகத்தில் நிறைய பருக்கள், பிளாக்ஹெட்ஸ் போன்றவை இருந்தால், மருத்துவரிடம் சென்றாலும், அவர் வைட்டமின் E மாத்திரையைத் தான் பரிந்துரைப்பார். வைட்டமின் E சருமத்திற்கு அழகையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. இத்தகைய வைட்டமின் E சத்து பாதாமில் ஏராளமாக உள்ளது. எனவே தினமும் பாதாம் சாப்பிட்டால் முகப்பருவைத் தடுக்கலாம்.

வயதான தோற்றம் மறைந்து இளைமையாக தெரிய ஏராளமான நல்ல குணங்களை பாதாம் கொண்டுள்ளது. எனவே தினமும் பாதாம் சாப்பிட்டு, முகத்தில் பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் மசாஜ் செய்தால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறைந்து அழகான தோற்றத்தைப் பெறலாம்.

பாதாம் பருப்பில் இருக்கும் நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்புகளை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. அதோடு இதில் வைட்டமின் E, மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், மெக்னீசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஆகியவையும் உள்ளது. இது உடலில் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது. கொழுப்புகள் உறிஞ்சுவது தடுக்கப்படுவதால், உடலில் கொழுப்பின் அளவு குறைந்து இதயத்திற்கு பாதுகாப்பு கிடைக்கிறது.

பாதாம் நினைவாற்றலை அதிகரிக்கும் மற்றும் உடலின் ஆற்றலை அதிகரிக்கும். ஏனென்றால் இது ரைபோஃப்ளேவின் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது உடலின் ஆற்றலை அதிகரிக்கும் மற்றும் நாள் முழுவதும் ஆற்றலோடு இருக்க உதவுகிறது. 

தினமும் பாதாம் சாப்பிட்டால், உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம். அவை வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், அடிக்கடி பசி  எடுக்காமல் இருக்கும். இது அதிகப்படியான உணவு உட்கொள்ளலை குறைக்கும். எனவே எடை குறைக்க விரும்பினால் பாதாம் சாப்பிடுவது சிறந்தது.

Views: - 464

2

0