காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: விமானி ஒருவர் பலி…மற்றொருவர் படுகாயம்..!!(வீடியோ)

Author: Rajesh
11 March 2022, 4:13 pm
Quick Share

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில் சேதம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஜம்மு காஷ்மீரின் வடக்கு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் உள்ளனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை அழைத்து வர ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று சென்றது. இந்த ஹெலிகாப்டர் குரேஸ் செக்டார் பகுதியில் தரையிறங்கும் போது விலகிச்சென்று விபத்துக்குள்ளானது.

சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் குரேஸ் செக்டரில் உள்ள பாரௌம் பகுதியில் இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறால் விழுந்து நொறுங்கியது. விபத்து நடந்த இடம் ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீரில் 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

courtesy

மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழந்ததாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டதா?என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.

பனி சூழ்ந்த பகுதியில் ஏற்பட்ட விபத்தில் விமானத்தில் பயணித்த 2 விமானிகளில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மற்றொரு விமானியின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 709

0

0