13 மாவட்டங்கள் புதியதாக உதயமாக உள்ளது ஆந்திர முதல்வரின் சாதனை : திருப்பதி ஏழுமலையான தரிசனம் செய்த ரோஜா பெருமிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2022, 5:15 pm

ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு நடிகை ரோஜா செல்வமணி தம்பதியினர் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா கணவர் திரைப்பட இயக்குனர் செல்வமணி உடன் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்த பிறகு அவர்களுக்கு ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

கோயில் வெளியே வந்த அவர் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் மக்கள் அனைவரும் மேலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என திருப்பதி ஏழுமலையானை வேண்டிக் கொண்டதாக நடிகைரோஜா தெரிவித்தார்.

நாற்பத்தி இரண்டு வருடங்களுக்குப் பிறகு மாநிலத்தில் 13 மாவட்டங்கள் புதிதாக நாளை மறுநாள் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைக்க உள்ளார். தற்போது உள்ள 13 மாவட்டங்களில் மேலும் 13 மாவட்டங்கள் இணைந்து 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இது ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் பெரும் சாதனை என தெரிவித்தார்.

  • sivakumar broke karthi and tamannaah love life தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!