1700 பேருக்கு கொரோனா… இந்தியாவில் வேகமெடுக்கும் தொற்று : கேரளாவில் மட்டும் இத்தனை பேர் பாதிப்பா?!!

Author: Udayachandran RadhaKrishnan
17 December 2023, 12:57 pm

1700 பேருக்கு கொரோனா… இந்தியாவில் வேகமெடுக்கும் தொற்று : கேரளாவில் மட்டும் இத்தனை பேர் பாதிப்பா?!!

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 699,638,659. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 669,413,292. உலகம் முழுவதும் கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் 6,956,687. உலக நாடுகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர்- ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 23,268,680. உலக நாடுகளில் நேற்று புதியதாக 15,046 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரளாவில்தான் 90%க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிற ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1701. இதில் கேரளாவில் மட்டுமே 1324 ஆக்டிவ் கேஸ்கள் பதிவாகி இருக்கின்றன.

கேரளா மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் 700 முதல் 1,000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கேரளாவில் கொரோனாவால் 2 பேர் பலியாகி உள்ளனர். கேரளாவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் JN1 பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். கேரளா கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் கொரோனாவால் ஒருவர் பலியானார். இதனையடுத்து பானூர் நகராட்சியில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கயை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கேரளாவின் வடமாவட்டங்களில் 2 நாட்களில் 2 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் அப்பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,44,69,799 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 53,3316. நமது நாட்டில் 220,67,79,004 டோஸ்கள் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு தொடர்பாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், கொரோனா பரவலால் அச்சமடைய தேவையில்லை. JN1 உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூர் விமான நிலையத்தில் 3 மாதங்களுக்கு முன்னரே இந்தியர்களுக்கு இந்த வகை பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. தற்போதும் நாட்டின் சில பகுதிகளில் இப்பாதிப்பு உள்ளது. நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!