20 பேரை காவு வாங்கிய தீ விபத்து.. விளையாட்டுத் திடலில் பயங்கர தீ : குழந்தைகள், பெரியவர்கள் சிக்கி பலி!

Author: Udayachandran RadhaKrishnan
25 May 2024, 9:27 pm

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் பிரம்மாண்ட கேளிக்கை அரங்கில் ‛‛கேம்ஜோன்’ உள்ளது. இங்கு குழந்தைகள், பெரியவர்கள் என பலர் கூடியிருந்தனர்.

இன்று மாலை பயங்கர திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ மற்ற இடங்களுக்கும் வேகமாக பரவியதால் அங்கு வந்த மேலும் பலர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

தகவலறிந்த தீயணைப்பு படையினர் ஏராளமான வாகனங்களில் வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

இதனிடையே, அந்த மையத்தில் இருந்து 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பெண்ணும், ஒரு குழந்தையும் அடக்கம்.

மேலும் படிக்க: பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் மீது மோதிய கார் : பதற வைக்கும் ஷாக் சிசிடிவி காட்சி!!

இந்த நிலையில் 20 பேர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளுது. மேலும் பலர் மையத்திற்குள் சிக்கி இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தீயணைப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து முதல்வர் பூபேந்திர பட்லே் ,மீட்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டரிடம் கேட்டறிந்தார்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?