மிரட்ட வந்தது ரிமால்.. புதிய புயல் உருவானதாக வானிலை மையம் அறிவிப்பு : முன்கூட்டியே விமான நிலையங்கள் மூடல்!

Author: Udayachandran RadhaKrishnan
25 May 2024, 9:54 pm
remal
Quick Share

மிரட்ட வந்தது ரிமால்.. புதிய புயல் உருவானதாக வானிலை மையம் அறிவிப்பு : முன்கூட்டியே விமான நிலையங்கள் மூடல்!

வங்க கடலில் புதிய புயலான ரிமால் உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ரிமால் புயலாக உருவானது.

இது மேற்குவங்கம் மாநிலம் கேனிங்கிலிருந்து 390 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. நாளை (மே.26) நள்ளிரவில் தீவிர புயலாக மாறி கரையை கடக்க வாய்ப்புள்ளது.

இப்புயல் வங்காள விரிகுடா மற்றும் அதன் முக்கிய பகுதியான சாகர் தீவு மற்றும் கோபுபுரா இடையே கரை கடக்கும்..ரிமால் புயல் காரணமாக அதிகபட்சமாக மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.

மேலும் படிக்க: குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமி பாலியல் பலாத்காரம்.. 23 வயது இளைஞரின் வெறிச்செயல்!

புயலாக உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கில் 12 கி.மீ வேகத்தில் நகர்கிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டது.

Views: - 188

0

0