ஒரே நாளில் அடுத்தடுத்து தீ விபத்து.. மருத்துவமனையில் பயங்கர தீ.. பச்சிளங்குழந்தைகள் பலி!

Author: Udayachandran RadhaKrishnan
26 May 2024, 10:23 am
fire
Quick Share

கிழக்கு டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் குழந்தைகள் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில் நேற்று இரவு 11.32 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மருத்துவமனையில் இருந்து 12 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், 7 குழந்தைகள் உயிரிழந்தன.

ஏனைய குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. குஜராத்தில் நேற்று விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க: பழனி முருகனை காண படியேறிய பக்தர்.. குடும்பத்துடன் மலையேறிய போது சோகம்..!!

இந்த சோக நிகழ்வு நடைபெற்ற அதேநாளில் டெல்லி மருத்துவமனையிலும் தீ விபத்து ஏற்பட்டு 7 குழந்தைகள் உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 158

0

0