பழனி முருகனை காண படியேறிய பக்தர்.. குடும்பத்துடன் மலையேறிய போது சோகம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
25 May 2024, 10:08 pm
Palani
Quick Share

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் ,விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இன்று வேடசந்தூர் அருகே வடமதுரையைச் சேர்ந்த பக்தர் முருகன் 51 வயதுடைய பக்தர் படிபாதை வழிபாதையாக கோவிலுக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு ரோப் கார் வழியாக கீழே அழைத்துவந்து திருக்கோவில் ஆம்புலன்ஸ் மூலம் பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டார் என்பதை அறிந்த குடும்பத்தினர் கதறி அழுத காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

Views: - 184

0

0