புஷ்பா பட பாணியில் செம்மரக்கட்டைகள் கடத்தல் : 3 பேர் கைது.. ரூ.40 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 May 2022, 1:31 pm

ஆந்திரா : கடப்பா அருகே செம்மரம் கடத்திய 3 பேரை கைது செய்து 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள், வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் இருந்து செம்மரங்கள் கடத்திய மூன்றுபேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூபாய் 40 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கதிர்ஐயா, பிரதாப், கதிரப்பா ஆகிய மூன்று செம்மர கடத்தல்காரர்கள் ஒண்டி மிட்டா, சித்த வட்டா, பாக்கறா பேட்டை பகுதியிலிருந்து செம்மரங்களை கடத்திய போது போலீசார் பிடித்து கைது செய்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலை வைத்து கடப்பா மாவட்டம் மண்டபள்ளி பகுதி விவசாய நிலத்தில் வெட்டி கடத்துவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 40 லட்சம் மதிப்புள்ள 22 செம்மரக்கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய எஸ்யூவி ரக கார் இருசக்கர வாகனம் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து கடத்தலில் தொடர்புள்ள மேலும் சிலரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?