முலாயம் சிங் மறைவையொட்டி 3 நாள் துக்கம் அனுசரிப்பு : அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு… முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2022, 11:47 am

சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 82. யாதவ் ஆகஸ்ட் மாதம் முதல் குருகிராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது.

அவர் பொதுநலக்கோட்பாட்டின் தூணாக இருந்தார். அவரது மறைவு ஒரு போராட்ட சகாப்தத்தின் முடிவாகும். அவரது ஆத்மா சாந்தியடைய விரும்புகிறேன் மற்றும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மூத்த அரசியல்வாதி முலாயம் சிங் யாதவின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும். அரசு சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று என்று யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?