சாலையோரம் உறங்கியவர்கள் மீது மோதிய லாரி…3 பேர் உடல்நசுங்கி பரிதாப பலி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்..!!

Author: Rajesh
19 May 2022, 11:29 am
Quick Share

சண்டிகர்: அரியானாவில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலம் ஜாஜ்ஜார் மாவட்டத்தில் பாலம் கட்டுமானப் பணிக்காக உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்திருந்த 18 புலம்பெயர் தொழிலாளர்கள் நெடுஞ்சாலையின் ஓரத்தில் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது நிலைதடுமாடி வந்த லாரி ஒன்று புலம்பெயர் தொழிலாளர்கள் மீது மோதியது.

இதில் மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல். மேலும் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்ட்லி-மனேசர்-பல்வால் விரைவுச்சாலையில், ஆசோதா சுங்கச்சாவடியில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் அதிகாலையில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

தொழிலாளர்கள், அந்த வழியாக செல்லும் வாகனங்களை எச்சரிக்கும் வகையில், தடுப்புகளை அமைத்தும், ஒளி பிரதிபலிப்பான்களை பொருத்தியும் தங்கள் பாதுகாப்பினை உறுதிபடுத்தியுள்ளனர். அப்படி இருந்தும், இந்த விபத்தானது, ஓட்டுனர் குடிபோதையிலோ, அல்லது தூக்க கலக்கத்திலோ இருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

லாரி பதிவு எண்ணைப் பயன்படுத்தி உரிமையாளரைக் கண்டுபிடித்த போலீசார், அவரிடம் இந்த சம்பவம் குறித்தும், ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 503

0

0