விரைவில் கயிறு வணிக மேம்பாட்டு மையம்… கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை தொட்டு துலங்காத துறையும் இல்லை : முதலமைச்சர் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2022, 11:36 am
Cbe Cm Stalin - Updatenews
Quick Share

தொல்பொருட்கள் கண்காட்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனையின் ஓவிய கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார் தமிழக முதலமைச்சர்.

கோவை வ.உ.சி. மைதானத்தில், தொல்லியல் துறை மற்றும்
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தொல்பொருட்கள் கண்காட்சி,தமிழக அரசின் ஓராண்டு சாதனையின் ஓவிய கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இதில் கீழடி வைகை நதிக்கரையில் நகர நாகரிகம், பொருநை ஆற்றங்கரை நாகரிகம், கொடுமணல் சங்க காலத் தொழிற்கூடம், மயிலாடும்பாறை 4200 ஆண்டுகள் பழமையான இரும்புக் காலப் பண்பாடு, ஆகியவை குறித்த தொல்பொருட்கள் கண்காட்சி காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

அதே போல தமிழக அரசின் ஓராண்டில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், சாதனைகள் உள்ளிட்டவை விளக்கிடும் ஓவியக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளதை முதலமைச்சர் பார்வையிட்டார்.

இந்த கண்காட்சி திறப்பு விழாவில் அமைச்சர்கள் தென்னரசு,சாமிநாதன், செந்தில் பாலாஜி, கயல்விழி மற்றும் நீலகிரி நாடளுமன்ற உறுப்பினர் ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு சென்றபின் தொடர்ந்து துர்கா ஸ்டாலின் பார்வையிட்டார்..

இதனை தொடர்ந்து கோவை அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் தொழில் முனைவோர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டும் துலங்காத துறையும் இல்லை; ஜவுளி, பொறியியல், ஆட்டோ மொபைல் என அனைத்து தொழில்களுக்கும் சிறந்த நகரம் கோவை.

சென்னைக்கு அடுத்தபடியாக தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்த நகரமாக கோவை திகழ்கிறது; அரசின் லட்சியத்தை அடைய கோவை மாவட்டத்தின் பங்களிப்பு முக்கியம் என தெரிவித்துள்ளார். மேலும், உற்பத்தி, ஏற்றுமதி உள்ளிட்டவற்றில் கோவை சிறந்து விளங்குகிறது. கோவையை மேம்படுத்த ஒரு மாஸ்டர் பிளான் திட்டம் உருவாக்கப்படும். கயிறு உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கயிறு வணிக மேம்பாட்டு மையம் கோவையில் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Views: - 644

0

0