பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…! புல்வாமாவில் ராணுவம் அதிரடி…!!

Author: kavin kumar
30 January 2022, 11:02 pm
Quick Share

புல்வாமாவில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகளை கருட் கமாண்டோ படை பிரிவினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகளை ராணுவத்துடன் விமானப்படையின் கருட் கமாண்டோ படை பிரிவினர் நடத்திய தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளை வீழ்த்த போராடிய கமாண்டோ படை வீரருக்கு நெஞ்சிலும், கையிலும் குண்டுகள் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த போதிலும் அவர், தப்பிச்செல்ல முயன்ற 3 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினர். இதேபோல் பட்கமில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையிலும் ஒரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான்.

Views: - 1282

0

0