காவலர்களை கண்மூடித்தனமாக தாக்கிய கள்ளச்சாராய கும்பல் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2022, 8:51 pm
Police Attacked -Updatenews360
Quick Share

ஆந்திரா : கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கலால் துறை காவலர்களை சரமாரியாக தாக்கிய கள்ள சாராய கும்பலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஆலமூர் பகுதியிலிருந்து கோதாவரி ஆற்றை கடந்து சில்லெபேட்டை பகுதிக்கு ஒரு கும்பல் தொடர்ச்சியாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகிறது.

மேலும் அந்த கும்பல் கலால்துறை காவலர்களுக்கு மாமுல் கொடுத்து தடையில்லாமல் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதிதாக வந்த உதவி ஆய்வாளர் உடன் கள்ளச்சாராய கும்பலை தடுக்க கோதாவரி ஆற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் படகில் கள்ளச்சாராயத்தை எடுத்துச் சென்றவர்களை மறித்து பறிமுதல் செய்ய முயன்றனர். ஆற்றின் கரையோரம் வந்த அந்த சாராய கும்பல் படகில் ஏறிய இரு காவலர்களை கண்மூடித்தனமாக தாக்கினர்.

இதனை தடுக்க முயன்ற உதவி ஆய்வாளரிடம் நீங்க போங்க சார் இவங்களுக்கு வாரம் வாரம் மாமுல் கொடுத்துட்டு இருக்கோம் இப்ப என்னடான்னா எங்களையே பிடிக்க வர்றாங்க என்றவாறு மேலும் அந்த காவலரை தாக்கினர்.

அங்கிருந்து தப்பிச் சென்ற உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இதுகுறித்து எந்த ஒரு வழக்கு பதிவு செய்யாமல் இருந்துள்ளனர். ஆனால் இதனை படம் பிடித்த ஒரு நபர் சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் வைரலாக பரவத் தொடங்கியது.

இதனை அடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து வீடியோவை ஆதாரமாக கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்த போலீசார் ரகசியமாக வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ள சாராய கும்பல் காவலர்களை அடித்து விரட்டிய இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Views: - 1503

0

0