ஆர்வம் காட்டாத மக்கள்..! 5 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசி பயன்படுத்தப்படவில்லை: காலாவதியாகும் என தகவல்..!

Author: Vignesh
6 November 2022, 3:39 pm
covaxin - updatenews360
Quick Share

கோவாக்சின் உற்பத்தி தடுப்பூசிக்கான தேவை இல்லாததால், பல மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டது. கொரோனா பரவல் ஐதராபாத், இந்தியாவில் குறைந்து விட்ட நிலையில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதிலும் மக்களிடம் ஆர்வம் காட்டுவது இல்லை.

இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தில் கோவாக்சின் தடுப்பூசி 200 மில்லியனுக்கும் (20 கோடி) அதிகமான அளவு கைவசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவாக்சின் உற்பத்தி தடுப்பூசிக்கான தேவை இல்லாததால், பல மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டது. தற்போது சுமார் 50 மில்லியன் (5 கோடி) டோஸ்கள் கோவாக்சின் தடுப்பூசி 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காலாவதியாகும் நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரித்த சுமார் 10 கோடி டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசி காலாவதியாகி விட்டதாக அந்நிறுவனம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 322

0

0