காட்டு பன்றிக்கு பயந்து நீர்த்தேக்கத்தில் குதித்த 500 மாடுகள் : வெள்ளத்தில் அடித்து சென்ற காட்சி.. பதறியடித்து குதித்த விவசாயிகள்…!!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2022, 12:59 pm
Cow flood - Updatenews360
Quick Share

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மார்காபுரத்தில் வெலுகொண்டா நீர்த்தேக்க திட்டம் என்ற பெயரிலான பெரிய நீர்த்தேக்கம் ஒன்று உள்ளது. வனப்பகுதியில் அமைந்துள்ள வெலுகொண்ட நீர்த்தேக்கம் அருகே மேய்ந்து கொண்டிருந்த பசுக்கள், மாடுகள் ஆகியவை அந்தப் பகுதிக்குள் வந்த காட்டு பன்றிகளை பார்த்து அச்சமடைந்தன.

இதனால் மிகவும் ஆழமான வெலுகொண்ட நீர்த்தேக்கத்துக்குள் சுமார் 500 பசுக்கள் இறங்கிவிட்டன. வெலுகொண்டா நீர்த்தேக்கத்திலிருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அங்கிருந்து வேகமாக தண்ணீர் வெளியேறி வருகிறது.

எனவே வெளியேறும் தண்ணீருடன் சேர்ந்து பசுக்கலும் அடித்து செல்லப்பட்டன. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள், பொதுமக்கள் ஆகியோர் சுமார் 350 பசுக்களை படகுமூலம் சென்று கைப்பற்றி கரை சேர்த்தனர். மற்ற பசுக்கள்,மாடுகள் ஆகியவற்றை தேடி கண்டுபிடித்து மீட்க முயற்சிகள் நடைபெற்ற வருகின்றன.

Views: - 490

0

0