7வது சம்மன்… அமலாக்கத்துறையில் கெஜ்ரிவால் ஆஜராவாரா? கைது செய்யப்படுவாரா? டெல்லியில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 February 2024, 9:29 am
Kejriwal
Quick Share

7வது சம்மன்… அமலாக்கத்துறையில் கெஜ்ரிவால் ஆஜராவாரா? கைது செய்யப்படுவாரா? டெல்லியில் பரபரப்பு!!

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை கடந்த நவம்பர் 2ம் தேதி ஆஜராகும் படி சம்மன் அனுப்பியிருந்தது.

ஆனால் அந்த சமயத்தில் மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலியில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுடன் இணைந்து பேரணி ஒன்றில் கலந்துகொண்டதால் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

இதையடுத்து, 2 வது முறை ஆஜராக கடந்த மாதம் 21 ஆம் தேதி அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் 10 நாள் தியானப் பயிற்சியில் ஈடுபட இருப்பதால் விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மாட்டார் என தகவல் வெளியாகி இருந்தது.

தொடர்ந்து3,4,5 என அடுத்தடுத்து சம்மன் அனுப்பியும் மதிக்காத கெஜ்ரிவாலுக்கு தற்போது 6வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆறாவது சம்மன்ல் நேரில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கெஜ்ரிவால் ஆஜராகமாட்டர் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் அமலாக்கத் துறை கெஜ்ரிவாலுக்கு 7ஆவது முறையாகச் சம்மன் அனுப்பி இருந்தது. இன்று திங்கள்கிழமை அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது.

விசாரணைக்கு ஆஜராகும் போது ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டது போல கெஜ்ரிவாலும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

ஹேமநாத் சோரனுக்கு அமலாக்கத் துறை 10 முறை சம்மன் அனுப்பிய நிலையில், அவர் இரண்டு முறை ஆஜராகி இருந்தார். இருப்பினும், அவர் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.

Views: - 103

0

0