விலை உயர்ந்த ஐபோனை வாங்கிய பிச்சைக்கார்? வைரலாகும் வீடியோ.. அதிர்ந்து போன ஊசூர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2023, 1:46 pm

விலை உயர்ந்த ஐபோனை வாங்கிய பிச்சைக்கார்? வைரலாகும் வீடியோ.. அதிர்ந்து போன ஊசூர்கள்!!

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவில் ஒரு நபர் தனது தோளில் நாணயங்கள் நிறைந்த பையை சுமந்து கொண்டு ஒரு கடைக்குள் நுழைகிறார்.

கடையில் இருந்த ஊழியர்கள் அந்த நபரின் உடையை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உண்மையில், வீடியோவில் காணப்படும் இளைஞன் கிழிந்த லுங்கியுடன் பிச்சைக்காரர் பே தோற்றத்தில் இருந்துள்ளார்.

இளைஞரின் உடலில் தூசி படிந்துள்ளது. அந்த இளைஞன், கடை ஊழியர்களிடம் iPhone 15ProMax போனைக் காண்பிக்கச் சொல்லி, அதை வாங்குவது பற்றிப் பேசுகிறார்.

காசுகள் நிரம்பிய பையை கீழே போட்டுவிட்டு காசுகளை தரையில் கொட்டுகிறார். ஆப்பிள் ஊழியர்கள் நாணயங்களை எண்ணத் தொடங்குகிறார்கள்.

எண்ணிக்கை முடிந்ததும் அந்த இளைஞருக்கு ஐபோன் வழங்கப்பட்டது. கடைசியில் அந்த இளைஞன் அங்கிருந்து காரில் புறப்பட்டார்.

இந்த வீடியோ இதுவரை 34 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. இந்த வீடியோவுக்கு சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் பல கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த மாதம்தான் ஆப்பிள் புதிய ஐபோன் சீரிஸ் ஐபோன் 15 ஐ அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் இதன் விற்பனை செப்டம்பர் 22 முதல் தொடங்கியுள்ளது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!