வந்தாச்சு மொபைல் முத்தம்மா திட்டம்.. இனி ரேஷன் கடைகளில் சுலபமாக பொருள் வாங்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2023, 2:21 pm
Mobile Muthamma - Updatenews360
Quick Share

வந்தாச்சு மொபைல் முத்தம்மா திட்டம்.. இனி ரேஷன் கடைகளில் சுலபமாக பொருள் வாங்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் மொபைல் முத்தம்மா திட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஆன்லைன், யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு ரேஷன் கடைகளில் இன்று முதல் பேடிஎம் வழியாக பணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

UPI செயலிகள் வாயிலாக பண பரிவர்த்தனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முன்பே தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது.

அந்த திட்டத்தின் அடிப்படையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இனி மக்கள் எளிதாக பேடிஎம் மூலம் ஸ்கேன் செய்து பணத்தை செலுத்த முடியும்.

இதற்காகவே மொபைல் முத்தம்மா திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரேஷனுக்கு வரும் பெண்களுக்கும் மற்றவர்களுக்கும் க்யூ ஆர் கோடு மூலம் பணம் அனுப்ப ஆலோசனை வழங்கப்படும்.

அவர்களுக்கு இதை பற்றிய விழிப்புணர்வு, பயிற்சி அளிக்கப்படும். அதேபோல் இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் படிப்படியாக க்யூ ஆர் கோடு அமைக்கப்பட்டு அதை பற்றிய விளக்கங்கள் அளிக்கப்படும்.

க்யூ ஆர் கோடு ,மூலம் பணம் எப்படி அனுப்ப வேண்டும் என்பதை பற்றி படிப்படியாக இதில் விளக்கம் அளிக்கப்படும். சென்னையில் 1500 ரேஷன் கடைகளில் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

உங்களிடம் பேடிஎம் இல்லை என்றாலும் வேறு யுபிஐ வழியாகவும் பணம் செலுத்த முடியும். இந்த பணம் நேரடியாக அரசுக்கு சென்று சேரும். அதனால் மக்கள் பணம் அரசுக்கு சென்று சேர்வதோடு மக்களும் எளிதாக பணத்தை செலுத்த முடியும்.

மேலும் இதன் மூலம் சில்லறை முறைகேடுகள் பல தடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் கட்டமாக சென்னை போக ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாய விலை கடைகளில் இந்த திட்டம் கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய கூட்டுறவு வங்கியுடன் இணைந்து UPI செயலிகள் வாயிலாக பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Views: - 412

2

0