சிதைந்து போன குடும்பம்… இரு மகள்களை கொன்ற தந்தை : அதிகாலையில் கேட்ட மரண ஓலம்.. ஸ்தம்பித்த கேரளா!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2024, 4:48 pm

சிதைந்து போன குடும்பம்… இரு மகள்களை கொன்ற தந்தை : அதிகாலையில் கேட்ட மரண ஓலம்.. ஸ்தம்பித்த கேரளா!

கேரளாவில் உள்ள கோழிக்கோடு மாவட்டம் பையோளி அருகே அயனிக்காட்டு பகுதியை சேர்ந்தவர் சுமேஷ். இவர் தனது மனைவி ஸ்வப்னா மற்றும் இரு மகள்களோடு வசித்து வந்தார்.

மூத்த மகள் கோபிகா பிளஸ் 1 வகுப்பும், இளைய மகள் ஜோதிகா 5ம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் தற்போது இந்த குடும்பத்தையே சிதைத்துள்ளது.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்வப்னா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து சுமேஷ் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து தொழிலையும், குடும்பத்தையும் கவனித்து வந்த சுமேஷ், ஸ்வப்னா மறைவால் வாடியிருந்தார். இதையடுத்து கோழிக்கோடு பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் சடலம் கிடப்பதாக தகவல் வந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனையிட்ட போது இறந்தது சுமேஷ் என்பது தெரியவந்தது. உடனே அவர் வீட்டுக்கு சென்று தகவலை கூற சென்ற போலீசாருக்கு மற்றொரு ஷாக் காத்திருந்தது.

வீட்டிற்குள் வாயில் நுரை தள்ளியபடி இருமகள்களும் இறந்து கிடக்க, அக்கம்பக்கத்தில் விசாரித்த போது மனைவியின் பிரிவால் குடும்பமே மன வருத்தத்தில் இருந்ததாக தெரிகிறது.

இதனால் மகள்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் சுமேஷ். இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை மேற்கொண் வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!