பெங்களூரூ குண்டுவெடிப்பு சம்பவம்… பாஜக நிர்வாகிக்கு தொடர்பா..? அறிக்கை வெளியிட்ட என்ஐஏ!!!

Author: Babu Lakshmanan
5 April 2024, 6:38 pm

பெங்களூரூ குண்டுவெடிப்பு சம்பவம்… பாஜக நிர்வாகிக்கு தொடர்பா..? அறிக்கை வெளியிட்ட என்ஐஏ!!!

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக பாஜக நிர்வாகியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில், என்ஐஏ அறிக்கை வெளியிட்டுள்ளது.

பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந்தேதி நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க: வாழ்நாள் முழுவதும் அலைய விட்டுருவேன்.. மிரட்டிய பாஜக வேட்பாளர்… டக்கென தேர்தல் அதிகாரி கொடுத்த ரியாக்ஷன்..!!!

பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. இதனிடையே, மூன்று மாநிலங்களில் நடத்திய சோதனையின் எதிரொலியாக பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான முசாமில் செரிப் ஹுசைன் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக பாஜக நிர்வாகி சாய் பிரசாத்திடம் என்ஐஏ விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: நாடாளுமன்ற தேர்தலில் திமுக ‘டாப்’…. 2026 தேர்தலில் கலக்கப் போகும் விஜய் கட்சி ; வெளியானது கருத்துக்கணிப்பு..!!

கடந்த வாரம் 2 இளைஞர்களின் வீடு, செல்போன் கடைகளில் சோதனை நடத்தியதன் அடிப்படையில், அவர்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக நிர்வாகி கைது என்ற தகவலுக்கு என்ஐஏ மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக உறுதிப்படுத்தாத தகவல்களை செய்தியாக வெளியிடுவதை தவிர்க்குமாறும், குண்டுவெடிப்பு பயங்கரவாத செயல் என்பதால் சாட்சிகளின் அடையாளத்த வெளியிடுவது விசாரணையை பாதிக்கும் என தெரிவித்துள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!