செல்ஃபி எடுக்க முயன்ற நிர்வாகி… ஆவேசமாக தட்டிவிட்ட ராகுல் காந்தி ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
21 December 2022, 8:36 pm

கன்னியாகுமரி ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி தொடங்கிய பாரத் ஜோடா பயணம், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 12 மாநிலம், 2 யூனியன் பிரதேசம் வழியாக 150 நாட்கள் வரை நடைபெற உள்ளது. தற்போது, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தானை கடந்து, இன்று அரியானாவில் நுழைந்துள்ளது.

இந்த யாத்திரையில், காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் என கலந்து கொண்டு, ராகுல் காந்தியை சந்தித்து வருகின்றனர். ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்தியின் பாதயாத்திரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

மேலும், நீண்ட நாட்களாக நிலவி வந்த முதலமைச்சர் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இடையேயான அதிகார போட்டிக்கும் தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியினரை குஷியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில், மேடையில் செல்ஃபி எடுக்க வந்த நிர்வாகியின் செல்போனை ராகுல் காந்தி தட்டி விட்ட சம்பவம் காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ராகுல் காந்தியுடன் நிற்கும் நிர்வாகி, தனது செல்போன் மூலம் செல்பி எடுக்க முயற்சிக்கிறார்.

அப்போது, கடுப்பான ராகுல் காந்தி, அவரது கையை ஆக்ரோஷமாக தட்டிவிடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை பகிர்ந்த பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 413

    0

    0