‘கண்கள் நீயே.. காற்றும் நீயே’… பார்வையற்ற பெற்றோருக்கு பாதுகாவலனாய் இருக்கும் சிறுமி… மனதை உருக்கும் வீடியோ!

Author: Babu Lakshmanan
17 December 2022, 10:01 pm
Quick Share

மகாராஷ்டிரா ; பார்வையற்ற பெற்றோருக்கு தினமும் உணவு வாங்கி கொடுத்து, வீட்டுக்கு அழைத்து செல்லும் சிறுமியின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மகாராஷ்டிராவில் மும்பை நகரில் உள்ள மீரா சாலையில் செயல்பட்டு வரும் உணவகத்திற்கு சிறுமி ஒருவர் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர் தன்னுடன், பார்வையற்ற பெற்றோரையும் அழைத்து வருகிறார். அவர்களுக்கு உணவு வாங்கி தருவதுடன், அதனை சாப்பிடவும் செய்ய வைத்த மீண்டும் வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.

தினமும் நடக்கும் இந்த நிகழ்வை கண்காணித்த நபர் ஒருவர், அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவர் அந்த பதிவில், முதன்முறையாக அவர்களை பார்த்தபோது உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். ஒவ்வொரு நாளும் அவர்கள் இந்த உணவகத்திற்கு வருகின்றனர். பெற்றோர் பார்வையற்றவர்கள்.

ஆனால் அவர்களது மகளின் கண்கள் வழியே இந்த உலகை அவர்கள் பார்க்கின்றனர். இந்த சிறுமி பல விசயங்களை நமக்கு கற்று தருகிறார். உங்களது பெற்றோரை விட உங்களை வேறு யாரும் நன்றாக கவனிக்க முடியாது. அதனால், உங்களை விட்டு செல்லும் முன்பு அவர்களை நீங்கள் நன்றாக கவனித்து கொள்ளுங்கள், என அந்த நபர் பதிவிட்டு உள்ளார்.

இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு, கமெண்ட்ஸ்களை பதிவிட்ட வருகின்றனர்.

Views: - 442

0

0