லாரிக்கு அடியில் புகுந்த கார் : கண்ணிமைக்கும் நேரத்தில் கோரம் : நொடியில் பலியான 6 பேர்!

Author: Udayachandran RadhaKrishnan
26 October 2024, 6:38 pm

நின்று கொண்டிருந்த லாரிக்கு அடியில் கார் புகுந்து கோர விபத்து. காரில் பயணித்த 6 பேரும் பலியான சோகம்

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் சிங்கலமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் அடியில் புகுந்து விபத்து ஏற்பட்டது.

இதனால் கார் முழுவதும் நசுங்கி நிலையில் காரில் பயணித்த ஆறு பேரும் உடல்கள் நசுங்கி உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மரணம் அடைந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்க: பாமகவுக்கு தாவிய தவெக நிர்வாகிகள்.. நாளை மாநாடு நடக்கும் நிலையில் விஜய்க்கு ஷாக்!

முதற்கட்ட விசாரணையில் மரணமடைந்த அனைவரும் அனைவரும் அனந்தபூரில் உள்ள இஸ்கான் கோவிலில் பிரதிநிதிகள் என்று தெரியவந்துள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!