லாரி மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார் : திருமண நிகழ்வுக்கு சென்று திரும்பிய 9 பேர் பலியான சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2022, 11:01 am
Andhra Accident - Updatenews360
Quick Share

திருப்பதி : அனந்தபுரம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் திருமணத்துக்கு சென்று திரும்பிய 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி அருகே அனந்தபுரம் அருகே பல்லாரியை சேர்ந்த 9 பேர் உரவ கோட்டையில் நேற்று நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டபின் இரவு ஊர் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பல்லாரி பகுதியில் எதிர்திசையில் வந்த லாரி கார் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. விபத்தில் கார் முழுவதுமாக நசுங்கி அதில் பயணித்த 9 பேரும் பரிதாபமாக மரணம் அடைந்தனர்.

கார் மோசமான நிலையில் நசுங்கியதால் மரணம் அடைந்தவர்களின் உடல்களை மீட்பது சவாலான காரியமாக இருந்தது. எனவே போலீசார் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் காரை உடைத்து உடல்களை மீட்டனர்.

விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள ஆந்திர போலீசார் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். மரணமடைந்த உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனந்தபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

Views: - 407

0

0