பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு…? 6 வங்கிகளின் பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு.!!

Author: Babu Lakshmanan
15 November 2023, 9:45 am
Quick Share

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

பொதுவாக நிதித் தேவைகளை சமாளிக்க அவ்வப்போது மத்திய அரசின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது வாடிக்கையாகும். அந்த வகையில், அண்மையில் நஷ்டத்தில் ஈடுபட்டு வந்த ஏர் இந்தியா நிறுவனம் தனியாருக்கு விற்கப்பட்டது.

இதனிடையே, மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளின் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரையிலான பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. அதாவது, மத்திய அரசின் வசம் உள்ள 80 சதவீதம் பங்குகளில் இருந்து 5 முதல் 10 சதவீதத்தை விற்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அதன்படி, பொதுத்துறை வங்கிகளாண எஸ்பிஐ பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், பஞ்சாப் அண்ட் சிந்து பேங்க், பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா, செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, யுகோ பேங்க் ஆகிய 6 வங்கிகளின் பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 354

0

0