வரலாறு காணாத வெயில்…இமாச்சல பிரதேசத்தில் பள்ளி நேரம் மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

Author: Rajesh
3 May 2022, 11:05 pm
Quick Share

சிம்லா: குளிர் பிரதேசமான இமாசல பிரதேசத்தில் குளிர் காலத்தில் பள்ளிகளுக்கு நீண்ட விடுமுறை விடுவது வழக்கம்.

குளிர் பிரதேசமான இமாசல பிரதேசத்தில் குளிர் காலத்தில் பள்ளி களுக்கு நீண்ட விடுமுறை விடுவது வழக்கம். கோடை காலத்தில் வழக்கம்போல் பள்ளிகள் நடைபெறும்.

ஆனால் தற்போது இமாசல பிரதேசத்தில் வரலாறு காணாத அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது. அனல் காற்று வீசுகிறது. எனவே, பள்ளிகளின் நேரத்தை இமாசல பிரதேச கல்வித்துறை மாற்றி உள்ளது.

அதன்படி, காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலோ அல்லது காலை 7.30 மணி முதல் 12.50 மணி வரையிலோ பள்ளிகள் செயல்படலாம் என்று இமாசல பிரதேச கல்வித்துறை இயக்குனர் அமர்ஜீத் சிங் சர்மா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Views: - 555

0

0