‘வாய மூடு…நகர மாட்ட..கை வச்சு தான் பாரு’: பெண் போலீசிடம் வம்பிழுத்த வழக்கறிஞர்..வைரலாகும் வீடியோ!!

Author: Rajesh
3 May 2022, 10:28 pm
Quick Share

கும்பகோணம்: கும்பகோணத்தில் பெண் போக்குவரத்து காவலரிடம் வழக்கறிஞர் ராபர்ட் என்பவர் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கும்பகோணம் பழைய பால பகுதி கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு பணியாற்றும் போக்குவரத்து காவலர்கள் பல்வேறு நெருக்கடிகளை அவ்வப்போது சந்தித்து வருகின்றனர். குடிபோதையில் வந்து தகராறு செய்வது, வாகன விபத்து உள்ளிட்டவை அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில்,வழக்கறிஞராக இருக்கும் ராபர்ட் என்பவர் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டுள்ளார். இதனையடுத்து வழக்கறிஞர் ராபர்ட் மிகுந்த இடையூறை ஏற்படுத்தியதால் துர்கா என்ற பெண் காவலர் பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால் அவர் கேட்காமல் பெண் போலீசிடம் வம்பிழுத்து தனது சட்டை பட்டனை கழற்றியபடி ஒருமையில் பேசியுள்ளார்.

இதனையடுத்து துர்கா அளித்த புகாரின் பேரில் வழக்கறிஞர் ராபர்ட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 677

0

0