மகாராஷ்டிராவில் மாறுது களம்? இண்டியா கூட்டணியின் வாக்கு சதவீதம் உயர்கிறதா? வெளியானது புதிய சர்வே!

Author: Udayachandran RadhaKrishnan
8 February 2024, 8:50 pm

மகாராஷ்டிராவில் மாறுது களம்? இண்டியா கூட்டணியின் வாக்கு சதவீதம் உயர்கிறதா? வெளியானது புதிய சர்வே!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று தேர்தல் நடைபெற்றால் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இதன்படி, மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 லோக்சபா தொகுதிகளில் 22 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ், சரத்வாரின் புதிய கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி 26 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

அதாவது, காங்கிரஸ் கட்சி 12 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகள் 14 இடங்களில் வெல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. வாக்கு சதவிகிதம் என எடுத்துக்கொண்டால் இந்தியா கூட்டணிக்கு 45 சதவிகிதமும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 40 சதவித வாக்குகளும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?